Pages

Saturday, February 3, 2018

துபையில் கடலில் மிதக்கும் உணவகம் திறப்பு (படங்கள்)

அதிரை நியூஸ்: பிப். 03
துபையின் சால்ட் பே (Salt Bay Kitchen) எனப்படும் மிதக்கும் சமையலறை எனும் உணவகம் கடலில் பயணம் செய்வோரை குறிவைத்து திறக்கப்பட்டுள்ளது. கைட் பீச் (Kite Beach) எதிரேயுள்ள துபை லகூன் (Dubai Lagoon) பகுதியில் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள இந்த படகு உணவகத்திலிருந்து துபை வேல்டு தீவுகள் (Dubai World Islands) மற்றும் பால்ம் வில்லா (Palm Villa) கடல் பகுதியிலும் உணவு டெலிவரி செய்ய அனுமதி பெற்றுள்ளனர்.

பகல் 12 மணிமுதல் இரவு 9 மணிவரை செயல்படும் இந்த உணவகத்திலிருந்து கரைக்கு உணவு டெலிவரி செய்யப்படாது. உணவு தேவைப்படுவோர் கடலில் கையை காட்டி அல்லது கொடியை அசைத்து சைகை செய்தால் தேவைப்படும் உணவை அங்கேயே தயாரித்து சப்ளை செய்வார்கள் அல்லது ஜெட்ஸ்கீ (Jet Ski) எனப்படும் கடல் ஸ்கூட்டரில் கொண்டு போய் வழங்குவார். படகில் அமர்ந்து உண்ணும் வசதியில்லை பார்சல் டெலிவரி மட்டுமே. சைவம் அசைவம் இரண்டும் உண்டு என்றாலும் தற்போது துரிதவகை உணவுகள் மட்டுமே தயாரித்து வழங்கப்படுகின்றன.

இந்த மிதக்கும் சமையறையில் ஒரு கேப்டன், 4 சமையல் கலைஞர்கள் (Chefs) மற்றும் 2 டெலிவரி பாய்களுடன் பயணிக்கின்றது. நேற்று வெள்ளிக்கிழமை அதன் திறப்பு விழாவை முன்னிட்டு ஜெட் ஸ்கீ செய்வோர், படகு மற்றும் சொகுசுப் படகு ஓட்டிகள் என பல தரப்பட்ட கடல் பயணிகளுக்கும் உணவு இலவசமாக டெலிவரி செய்யப்பட்டது. கடல் சீற்றங்களின் போது கேப்டனின் உத்தரவை பொறுத்தே மிதக்கும் சமையலறை செயல்படுமாம்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...