Pages

Monday, February 5, 2018

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி !

அதிராம்பட்டினம், பிப்.05
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் முதல் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

பள்ளி மாணவன் ஹாபிஸ் பைஜூதீன் கிராத் ஓதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு சமூக ஆர்வலர் எச். முகமது சலீம் தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக அதிராம்பட்டினம் சி.எம்.பி லேன் இஜாபா பள்ளிவாசல் தலைமை இமாம் மவ்லவி அப்துல் ஹாதி முப்தி கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார்.

பள்ளி துணைத் தாளாளர் எம்.எஸ் முகமது ஆஜம் அறிமுக உரை நிகழ்த்தினார். பள்ளி நிர்வாகப் பொருளாளர் முகமது இப்ராஹீம் தொடக்க  உரை நிகழ்த்தி முடிவில் நன்றி கூறினார். பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் என்.ஷிபகத்துல்லாஹ் வாழ்த்துரை வழங்கினார்.

முன்னதாக, பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக துணைச் செயலாளர் எம்.எஃப் முகமது சலீம் வரவேற்றார். நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் மவ்லவி முகமது இத்ரீஸ் தொகுத்து வழங்கினார்.

நிகழ்ச்சியில், முன்னாள் மாணவர்கள் 70 பேர் கலந்துகொண்டு பள்ளிக்கூட வாழ்வில் நிகழ்ந்த மலரும் நினைவுகளை பகிர்ந்துகொண்டனர். மேலும், பள்ளி மேம்பாட்டிற்கு ஆலோசனைகளை வழங்கினர். இதில், பள்ளியில் சிறந்த கல்வியாளர்களை ஆசிரியர்களாக பணியமர்த்தல்,  பள்ளியில் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைத்து குழுவொன்றை ஏற்படுத்தி பொறுப்பாளர் நியமிப்பது, பள்ளியில் கல்வி பயிலும் மாணவிகளை குழந்தைகள் நல மருத்துவர்களாக உருவாக்குவது. அவர்களை உள்ளூரிலேயே சேவையாற்றக் கேட்டுக்கொள்வது, வரும் 2022-2023 ல் பள்ளியின் பொன் விழா ஆண்டை முன்னாள் மாணவர்களுடன் இணைந்து நடத்துவது, அடுத்தக் கூட்டத்தை வரும் ஜூன் மாதத்தில் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...