Pages

Thursday, February 8, 2018

குழந்தைகளுக்கான இதய கோளாறுகள் கண்டறிதல் முகாம்!

பேராவூரணி பிப்.08
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை அடுத்த செருவாவிடுதி தரம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், திருச்சி காவேரி இதய மருத்துவமனையுடன் இணைந்து குழந்தைகளுக்கான பிறவி இதயக்கோளாறு கண்டறிதல், பிறவி ஊனம், அன்னப்பிளவு கண்டறிதல் சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி.சௌந்தர்ராஜன் இம்முகாமிற்கு தலைமை வகித்தார். பேராவூரணி உதவி தொடக்கக் கல்வி அலுவலர் கோ.தமிழ்செல்வி, கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் கோ.அங்கயற்கண்ணி, சமூக ஆர்வலர்கள் ஏசிஇ அறக்கட்டளை தலைவர் அடைக்கலம், தென்னங்குடி ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருச்சி காவேரி இதய மருத்துவமனை சிறப்பு இதய அறுவை சிகிச்சை டாக்டர்கள் ஆன்டோ சகாயராஜ், சரண்யா ஆகியோர் குழந்தைகளை பரிசோதித்தனர்.

டாக்டர்கள் தீபா, ரஞ்சித், சிவரஞ்சனி, கோகிலா, கீர்த்திகா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகரன், மருத்துவமில்லா மேற்பார்வையாளர் கண்ணன், மருந்தாளுநர் சரவணன் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

பேராவூரணி, சேதுபாவாசத்திரம், திருவோணம், ஒரத்தநாடு, மதுக்கூர், தாமரங்கோட்டை, பூவாணம் பகுதிகளை சேர்ந்த பள்ளிச்சிறார் நலத்திட்ட மருத்துவக்குழு மூலம், நோய் அறிகுறி கண்டறியப்பட்ட 150 குழந்தைகளுக்கு இம்முகாமில் எக்கோ பரிசோதனை செய்யப்பட்டதில், 52 குழந்தைகளுக்கு கோளாறு கண்டறியப்பட்டது. இதில் முதல்கட்டமாக 20 குழந்தைகள் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவச அறுவைசிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். நிறைவாக திருச்சி காவேரி இதய மருத்துவமனை மக்கள் தொடர்பு அலுவலர் மாதவன் நன்றி கூறினார்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...