Pages

Tuesday, February 20, 2018

துபையில் ஆண்ட்ராய்டு போன் மூலம் பார்க்கிங் கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகம்!

அதிரை நியூஸ்: பிப்.20
துபையில் நோல் கார்டு மூலம் ஆண்ட்ராய்டு போன்கள் வழியாக பார்க்கிங் கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகம்.

துபையில் பார்க்கிங் கட்டணங்கள் செலுத்துவதற்கு பல்வேறு வசதிகள் உள்ளன. நாணயங்கள், எஸ்எம்எஸ் மற்றும் ப்ரீபெய்டு பார்க்கிங் கார்டுகள் என உள்ள வசதிகளுடன் பொது போக்குவரத்து டிக்கெட்டாக பயன்படும் நோல் கார்டுகளை (NOL Cards) கொண்டு ஆண்ட்ராய்டு போன்களில் மூலம் செலுத்தும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே நோல் கார்டுகளை கொண்டு பார்க்கிங் டிக்கெட்டிங் மெஷின்களில் டிக்கெட் எடுக்கும் வசதி கடந்த 2009 ஆம் ஆண்டே அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது ஆண்ட்ராய்டு போன்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது, விரைவில் இதரவகை போன்களுக்கும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என துபை போக்குவரத்து துறை (RTA) அறிவித்துள்ளது.

இத்திட்டத்தில் இணைவதற்கு உங்களுடைய ஆண்ட்ராய்டு மொபைல் போனிலிருந்து துபை போக்குவரத்து துறையின் RTA Dubai app  (ஆப்பை) தரவிறக்கம் செய்து கொண்டு அதிலுள்ள பார்க்கிங் கட்டணம் செலுத்த தரப்பட்டுள்ள வாய்ப்பிற்குள் சென்று உங்களுடைய நோல் கார்டுகளை லேசாக தட்டுவது அல்லது காட்டுவதன் மூலம் தானாகவே அதிலிருந்து கட்டணத்தை எடுத்துக் கொள்ளும். இதற்காக தற்போது இதர வகை சேவைகளின் மீது கூடுதலாக வசூலிக்கப்படும் 30 பில்ஸ் (காசுகள்) பரிமாற்ற கட்டணமும் (Transaction Fee) வசூலிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...