Pages

Sunday, February 4, 2018

வலி மாத்திரைகளின் விளைவுகள் ~ அதிரை எம்.எஃப் முஹம்மது ஹுசைன் (மருத்துவ மாணவர்)

'மருத்துவ மாணவர்' எம்.எப் முஹம்மது ஹுசைன்
அதிரை நியூஸ்: பிப்.04     
நாம் உட்கொள்ளும் வலி மாத்திரைகளால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி எடுத்துரைக்கிறார் மருத்துவ மாணவர் அதிராம்பட்டினம் எம்.எப் முஹம்மது ஹுசைன்.

இதுகுறித்து கூறியது;
உணவே மருந்து என்ற காலம் போய் மருந்தே உணவு என்பது போன்று ஆகிவிட்டது. அனைவரும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் மருந்து எடுத்துக் கொள்ளும் நிலைமை ஏற்பட்டு விட்டது.அந்த வகையில் நாம் அதிகமாக உற்கொள்ளும் மருந்துகளில் வலி மாத்திரையும் ஒன்று.
     
நம் உடலில் ஏதேனும் உறுப்புகளில் பாதிப்பு ஏற்படும் போது அதை உணர்த்தும் விதமாக வலி ஏற்படுகிறது.அது எதனால் ஏற்படுகிறது என்பதை உணராமல் நாம் வலி மாத்திரையின் மூலம் வலி தீர்த்தல் போதும் என்று எண்ணுகிறோம்.
       
உடலில் சில உறுப்புகளில் ஏற்படும் பாதிப்பு அதன் பகுதியிலேயே வலி ஏற்படும்.ஒரு சில உறுப்புகளில் ஏற்படும் பாதிப்புக்களோ வேறு சில பகுதிகளில் வலியை ஏற்படுத்தும்.
       
உதாரணத்திற்கு குடல்வால் அழற்சி (Appendicitis) மற்றும் குடலிறக்கம் (Hernia) இவைகளினால் அடிவயிற்று பகுதியில் வலி ஏற்படும். கணையத்தில் (Pancreas) பாதிப்பு ஏற்படும் போது, மேல் புற வயிற்றில் மற்றும் இடது தோள் பட்டையில் வலி ஏற்படும்.
       
நம் உடலில் உள்ள சுமார் ஐந்து லிட்டர் இரத்தம் எல்லா பகுதிகளுக்கும் சுற்றி கொண்டிருக்கிறது. நாள் ஒன்றிற்கு சுமார் 400 முறை என்ற விகிதத்தில் 2000 லிட்டர் இரத்தம் கிட்னி வழியாக சுற்றி செல்கிறது. நாம் உற்கொள்ளும் வலி மாத்திரைகளில் உள்ள இராசயனமானது  இரத்தக் குழாயில் உள்ள (Muscle Intima) என்ற தசைகளை சேதப்படுத்துகிறது .
       
இரத்தம் அதிகமாக கிட்னிக்கு செல்வதால் கிட்னி பாதிப்படைகிறது. வலி மாத்திரையின் இராசாயனத்தை கல்லீரல் நச்சுத்தன்மையை  நீக்குகிறது. அதிகமாக கல்லீரல் வேலை செய்வதால் நாளடைவில் அதுவும் பாதிப்படைகிறது. பின்பு படிப்படியாக பிற உருப்புக்களும் பாதிப்படைகிறது.

ஆகவே முறையாக மருத்துவரின் மூலம் வலிக்கான காரணத்தை கண்டறிந்து, அதற்குறிய சிகிச்சை மேற்கொள்வதன் மூலமும், வலி மாத்திரைகளை தவிர்த்துக் கொள்வதன் மூலமும் நமது உடல் ஆரோக்கியத்தைக் காப்போம்' என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...