Pages

Monday, February 5, 2018

சவுதியில் வீட்டுப் பணியாளர்களுக்கு சம்பளத்தை உறுதி செய்யும் சம்பள அட்டைகள் வழங்க உத்தரவு!

அதிரை நியூஸ்: பிப்.05
சவுதியில் வீட்டுப் பணியாளர்களுக்கு சம்பளத்தை உறுதி செய்யும் சம்பள அட்டைகள் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சவுதியில் அனைத்து வகை வீட்டுப் பணியாளர்கள் (All kinds of Domestic workers) எல்லோருடைய நிலையும் ஏற்றம் பெற்றதோ, சம்பளம் மற்றும் ஆண்டு விடுமுறைகள் உறுதி செய்யப்பட்டதோ இல்லை என்பதுடன் சில மன, உடல் ரீதியான துன்புறுத்தல்களையும் சந்திப்பதாகவே செய்தி வருகின்றன என்றாலும் பலருக்கு அமையும் நல்ல சவுதி குடும்பத்தை பொறுத்து குடும்பத்தில் ஒருவராகவே மிகவும் மதிக்கப்படுபவர்களும் சம்பாதிப்பவர்களும் உரிய பலன்களை உரிய காலங்களில் பெற்றுக் கொள்பவர்களும் உள்ளனர் என்பதையும் ஒப்புக் கொள்ளவே வேண்டும்.

வீட்டுப் பணியாளர்கள், டிரைவர்கள், சமையல் கலைஞர்கள் போன்றோர் சந்திக்கும் சம்பள பிரச்சனையை ஒரு முடிவுக்கு கொண்டு வரும் நோக்குடனும் குடும்ப வன்முறைகள் குறித்து புகார் தெரிவிக்க ஏதுவாகவும் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள புதிய சட்டம் நம்பிக்கை தரும் தூரத்து வெளிச்சமாகவே ஒளிர்கின்றது.

இப்புதிய சட்டத்தின்படி சவுதிக்குள் புதிதாக வரும் அனைத்து வகை வீட்டுப் பணியாளர்களுக்கும் சம்பளம் மாதமாதம் வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் வங்கியில் வீட்டுப் பணியாளர்களுக்கு சம்பளக் கணக்கு துவக்கி அதன் சம்பள அட்டையை மிக விரைவாக பெற்றுத்தர வேண்டும் என்றும், ஏற்கனவே பணியிலிருப்பவர்களுக்கு 6 மாத காலங்களுக்குள் வழங்க வேண்டும் என்றும், வீட்டுப் பணியாளர்களுடைய வேலை ஒப்பந்த ஷரத்துக்களை ஆன்லைன் வழியாக முஸானத் தளத்தில் (www.musaned.com.sa) பதிய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் பதிவுக்குப் பின் ஒப்பந்த பத்திரத்தை நகலெடுத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும்.

மேலும் வீட்டு முதலாளிகள் பணியாளர்கள் மூலம் சந்திக்கும் விதிமீறல்கள், குற்றங்கள் பற்றியோ அல்லது பணியாளர்கள் வீட்டு முதலாளிகள் மூலம் சந்திக்கும் விதிமீறல்கள், குற்றங்கள் பற்றியோ புகார் அளிக்க 19911 என்ற வாடிக்கையாளர் சேவை எண் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.

Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...