Pages

Monday, February 5, 2018

மாஸ்கோ நகரை மூடிய உறை பனிமழை (அழகிய படங்கள்)

அதிரை நியூஸ்: பிப்.05
100 வருடங்களில் இல்லாத அளவில் மாஸ்கோ நகரை மூடிய உறை பனிமழை

ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் கடந்த 100 வருடங்களில் இல்லாத அளவிற்கு கடும் உறைபனி கொட்டியுள்ளது. ஒரு மாதத்தில் பொழியும் சராசரி அளவின் ஒரு பாதி அளவையும் தாண்டி 24 நேரத்திலேயே பெய்துள்ளதால் மாஸ்கோ நகரை தற்போது சுமார் 43 செ.மீ அளவிற்கான பனிப்போர்வை மூடியுள்ளது.

0 டிகிரிக்கும் குறைவான கடும் குளிர், முகத்தில் அறைவது போன்ற காற்று, மங்கலான சூழல் போன்றவைகளால் மாஸ்கோ நகரமே ஸ்தம்பித்து வீடுகளுக்குள் முடங்கியுள்ளது. இதுபோன்ற சீதோஷ்ணம் 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை தாக்குமாம்.

அனைத்து உயிரனங்களும் இந்த உறைபனியாலும், குளிராலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், மனிதர்கள் முரட்டு ஆடைகளையே அணிந்து நடமாட முடியும் என்ற போதிலும் ஒரு படத்தில் அங்குள்ள Greyhound Barzoi Dogs இன நாய்கள் புசு புசு முடிகளற்ற (Fur) தோலுடன் இயல்பாய் திரிவதை பாருங்கள்.

இறைவனால் சாத்தியமில்லாதது ஏது? அல்லாஹ் மிகப் பெரியவன்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
 
 
 
 
 
 
 
 
 
 
  
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...