Pages

Monday, February 5, 2018

அதிரையில் இருந்து மன்னார்குடி ரயில் நிலையத்திற்கு அரசு பேருந்து வசதி செய்து தர வலியுறுத்தல்!

பட்டுக்கோட்டை, பிப்.05
பட்டுக்கோட்டை வட்ட ரயில்பயணிகள் சங்க உறுப்பினர்கள் கூட்டம் 04.02.2018 மாலை 5.00மணிக்கு பட்டுக்கோட்டை நிலா பள்ளியில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு ரயில் பயணிகள் சங்க தலைவர் என்.ஜெயராமன் தலைமை வகித்தார். துணைத்தலைவர்கே.லஷ்மிகாந்தன் வரவேற்புரையாற்றினார்.

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பட்டுக்கோட்டை- தஞ்சாவூர், பட்டுக்கோட்டை - மன்னார்குடி புதிய அகல ரயில்பாதை அமைக்க நில ஆர்ஜிதம் செய்ய உத்திரவிட்ட தமிழக முதல்வர் அவர்களுக்கும் ராஜ்ய சபா உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் அவர்களுக்கும், மக்களவை உறுப்பினர் கு.பரசுராமன் அவர்களுக்கும்,பட்டுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் சி.வி சேகர் அவர்களுக்கும், தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் , பட்டுக்கோட்டை வருவாய்கோட்டாட்சியர் மற்றும் வருவாய்த்துறை உயர் அலுவலர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பட்டுக்கோட்டை - காரைக்குடி அகல இருப்புபாதை அமைக்கும் பணிமுடிவடைந்து போக்குவரத்து துவங்கும்போது  பட்டுக்கோட்டை , காரைக்குடி, திருச்சி, அரியலூர் வழியாக சென்னைக்கு விரைவு ரயில் விட வேண்டும்.அதுபோல காரைக்குடி வழியாக இராமேஸ்வரம், கன்னியகுமரி போன்ற ஊர்களுக்கும் விரைவு ரயில் போக்குவரத்து வசதி செய்திடல் வேண்டும்.

மன்னை எக்ஸ்பிரஸ் தஞ்சாவூர் வழியாக சென்னைக்கு செல்வதை மாற்றி திருவாரூர் வழியாக சென்னைக்கு செல்லும்போது பட்டுக்கோட்டை மற்றும் அதிராம்பட்டினத்திலிருந்து மன்னை எக்ஸ்பிரஸில் பயணம் செய்ய ஏதுவாக பட்டுக்கோட்டை மற்றும் அதிராம்பட்டினத்திலிருந்து மன்னார்குடி ரயில் நிலையத்திற்கு அரசுப்பேருந்து வசதி செய்து தர வேண்டும்.

பட்டுக்கோட்டை - திருவாரூர் அகல இரயில் பாதை அமைக்கும் பணியினை விரைந்து முடித்து மயிலாடுதுறை வழியாக சென்னைக்கு விரைவு ரயில் வசதி செய்து தர வேண்டும்.

ரயில்களில் பிச்சை எடுப்பவர்களால் பயணகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. எனவே ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பிச்சை எடுப்பதை தடை செய்யவேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேட்டப்பட்டன.

புதிதாக ஐந்து உறுப்பினர்கள் சங்கத்தில் இணைந்தனர். கூட்டத்தில் சங்க செயலாளர் வ.விவேகானந்தம், பொருளாளர்.பி.சுந்தர ராஜுலு,செயற்குழு உறுப்பினர்கள் கே.செபஸ்தி, ஏ.ஷேக்பரீது, டி.பாலசுப்ரமணியம், வி.இராசேந்திரன்,மற்றும் எம்.கலியபெருமாள் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர். முடிவில் சங்க துணை செயலாளர்ஜே.பிரின்ஸ் விஜயகுமார் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...