அதிரை நியூஸ்: பிப்.06
துபையில் சாலிக் டோல்கேட்கள் 2007 ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் செயல்பட்டு வருகின்றன. ஒருமுறை டோல்கேட் வழியாக செல்வதற்க 4 திர்ஹங்கள் பிடிக்கப்படுகின்றன. துபையில் மொத்தம் 7 டோல்கேட்கள் உள்ளன. இந்த டோல்கேட்களைப் போல் அபுதாபியிலும் அமைத்திடும் திட்டம் அபுதாபியின் ஆட்சிமன்ற எக்ஸிகியூடிவ் கவுன்சிலின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
இந்த சாலிக் டோல்கேட்கள் அமைக்கப்படும் இடங்கள், டோல் வசூலிக்கப்படும் நேரம், டோல் கட்டணம் போன்றவை விரைவில் நிர்ணயம் செய்யப்பட்டு அறிவிக்கப்படுவதுடன் இந்த டோல் கட்டணங்களிலிருந்து ஆம்புலன்ஸ் வாகனங்கள், தீயணைப்புத் துறை வாகனங்கள், ராணுவ வாகனங்கள், பொது போக்குவரத்து பஸ்கள், மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றிற்கு விலக்கு தரப்படும்.
டோல் கட்டணங்கள் செலுத்தாதவர்கள் மீது அதிகப்பட்சம் 10,000 திர்ஹங்களுக்கு மிகாமல் அபராதம் விதிக்கப்படும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.