Pages

Friday, February 2, 2018

பட்டுக்கோட்டை-தஞ்சாவூர், பட்டுக்கோட்டை-மன்னார்குடி புதிய அகல ரயில் பாதை பணிக்கு நில எடுப்பு ஆய்வுக்கூட்டம்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் தஞ்சாவூர்-பட்டுக்கோட்டை, மன்னார்குடி-பட்டுக்கோட்டை புதிய அகல ரயில் பாதை அமைக்கும் பணிக்கு நில எடுப்பு தொடர்பான தென்னக ரயில்வே துறையுடன் ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்  தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் இன்று (02.02.2018) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்ததாவது;
தஞ்சாவூர்-பட்டுக்கோட்டை புதிய அகல ரயில் பாதை ஒரத்தநாடு வழியாக இயக்கப்படுவது தொடர்பாக நில எடுப்பு செய்யப்படவுள்ள கிராமங்கள் பரப்பளவு மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தஞ்சாவூர் வட்டத்தில் புளியந்தோப்பு, குளிச்சப்பட்டு, சூரக்கோட்டை, காட்டுர், மடிகை, ஆகிய கிராமங்களில் 31.23.90 ஹெக்டேர் நில எடுப்பும், ஒரத்தநாடு வட்டத்தில் மூர்த்தியம்பாள்புரம், புதூர், தெலுங்கன்குடிகாடு, கோவிலூர், புலவன்காடு, சோழகன்குடிகாடு, ஆவிடநல்லவிஜயபுரம் ஆகிய கிராமங்களில் 42.80.50 ஹெக்டேர் பரப்பளவும், பட்டுக்கோட்டை வட்டம், கரம்பயம், மகாராஜசமுத்திரம் ஆகிய கிராமங்களில் 21.48.40 ஹெக்டேர் பரப்பளவில் தென்னக ரயில்வே துறைக்கு அகல ரயில் பாதை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.   

மன்னார்குடி-பட்டுக்கோட்டை புதிய அகல ரயில் பாதை அமைப்பதற்கு கீழக்குறிச்சி, ஆவிக்கோட்டை, ஓலையக்குன்னம், அணைக்காடு, வெண்டாக்கோட்டை, நாட்டுச்சாலை, வேப்பங்குளம், தளிக்கோட்டை, பொன்னவராயன்கோட்டை, பொன்னவராயன்கோட்டை உக்கடை, மோகூர், மதுக்கூர், முசிறி, நாடியாம்பாள்புரம் ஆகிய கிராமங்களில் நிலம் கையப்படுத்தப் படவுள்ளது.  இப்பணிகள் தென்னக ரயில்வே துறையினர் ஒவ்வொரு வாரமும் இப்பணி தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசிக்க வேண்டுமென்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், தென்னக ரயில்வே துறை பொறியாளர் எஸ்.சேகர், கும்பகோணம் சார் ஆட்சியர் பிரதீப் குமார்,  பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் கோவிந்தராசு, வட்டாட்சியர் தங்கபிரபாகரன் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...