Pages

Wednesday, February 7, 2018

காதிர் முகைதீன் கல்லூரி என்சிசி சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் (படங்கள்)

அதிராம்பட்டினம், பிப்.07
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி தேசிய மாணவர் படை (என்சிசி) மற்றும் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில், ஏரிப்புறக்கரை ஊராட்சியை தத்தெடுத்து, அப்பகுதியில் பொது சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கல்வி விழிப்புணர்வு ஆகிய நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, காதிர் முகைதீன் கல்லூரி தேசிய மாணவர் படை (என்சிசி) சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் ஏரிப்புறக்கரை ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு பள்ளித் தலைமை ஆசிரியை (பொறுப்பு) ஆனந்தநாயகி  தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக, பட்டுக்கோட்டை போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் வாசுதேவன், போக்குவரத்து தலைமைக் காவலர் தமிழ்வாணன் ஆகியோர் கலந்து கொண்டு, சாலை விதிகள் பாதுகாப்பு, மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், இருசக்கர வாகன ஓட்டிகள் தலைகவசம் அணிவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்

முகாம் ஏற்பாட்டினை, காதிர் முகைதீன் கல்லூரிச் செயலர் எஸ்.ஜே அபுல் ஹசன் வழிகாட்டுதல் பேரில், கல்லூரி தேசிய மாணவர் படை அலுவலர் மேஜர் பி. கணபதி செய்தார். இம்முகாமில், பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி தேசிய மாணவர் படை வீரர்கள், பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...