Pages

Tuesday, February 13, 2018

துபையில் உலகின் முதலாவது நிஜ 'பகுதி ரோபோ மனிதன்'

(குறிப்பு: இது என்னைப் போன்ற ஏராளமானோருக்கு புரியாத பதிவு தான். எனவே என்னைப் போன்ற மிக மிக மிகக் குறைவான தகவல் தொழிற்நுட்ப அறிவுள்ள சகோதரர்கள் அப்படியே நம்பி அல்லது நம்பாமல் இப்பதிவை கடந்து செல்வதே உத்தமம். தகவல் தொழிற்நுட்ப அறிவுள்ள சகோதரர்களுடைய லெவல் வேறு என்பதால் அவர்களின் முடிவுக்குள் நாம் வர விரும்பவில்லை)

அதிரை நியூஸ்: பிப்.13
துபையில் நடைபெற்ற உலக அரசுகளின் உச்சி மாநாடு எனும் நிகழ்வு கடந்த வாரம் (பிப்ரவரி 4,5,6)  3 நாட்கள் துபை மதீனத் ஜூமைராவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உலக நாடுகளின் அரசு சார்பாக 4,000க்கு மேற்பட்ட பிரதிநிதிகளும், 130 சபாநாயகர்களும், சிறப்பு அழைப்பாளர்களும் கலந்து கொண்டனர். இவர்களில் ஒருவராக 2004 ஆம் ஆண்டே உலகின்  முதலாவது சைபோர்க் (இயற்கையும், செயற்கையும் இணைந்த பகுதி ரோபோ மனிதன்) என அங்கீகரிக்கப்பட்ட 'நீல் ஹார்பின்ஸன்' என்பவரும் கலந்து கொண்டார். (இவர் பிரிட்டனில் பிறந்து ஸ்பெயினின் கேட்டலோனியாவில் வளர்ந்த மனிதன் இல்லையில்லை சைபோர்க்)

இவருடைய தலைக்குள் ஒரு செயற்கை ஆன்டெனா ஒன்று நிரந்தரமாக பதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆன்டெனா உதவியுடன் 'நிறக்குருடு' (Color Blindness) எனும் தன்மையை வென்று அனைத்து நிறங்களையும் ஆடியோ அலைகளாக உள்ளுணர்கிறார். நம் கண் முன்னே காட்சியளிக்கும் அலைக்கற்றையை விட காணும் காட்சிகளை மேலும் துல்லியமான நிறத்தில் உணர முடிகிறது, அகச்சிவப்பு (Infra Red) புறஊதா (Ultra Violet)  கதிர்கள் ஆகியவற்றை பகுத்தறிந்து உணர முடியும், இந்த ஆன்டெனா இன்டெர்நெட்டுடன் இணைக்கப்பட்டுள்ளதால் உலகின் எந்த இடத்திலிருந்தும் எந்த நிறத்தையும் உணரவும், உலகின் எந்த பகுதிக்கும் தான் விரும்பும் வண்ணத்தை சேட்டிலைட் வழியாக அனுப்ப முடியும் என்றும் பட்டியலிடுகிறார். (நம்ப முடியவில்லை தானே! ஆனால் சர்வதேச தகவல் தொழிற்நுட்ப வித்தகர்களும் பல அரசுகளும் சாத்தியமே என சான்றழித்துள்ளது)

அவருடைய தலையிலுள்ள வைபை ஆன்டெனா மின்காந்த கதிர்வீச்சுகள், வீடியோ மற்றும் படங்களையும் (Images) அவர் கேட்டு உணரக்கூடிய ஆடியோ அதிர்வுகளாக தலைக்கு உள்ளே கடத்துகின்றன. இந்த ஆன்டெனாவைப் பற்றி அவர் விவரிக்கும் போது, 'இது ஓர் கருவியல்ல மாறாக என்னுடைய உடலின் ஒரு பகுதியே. நான் கூடுதலாக ஆன்டெனாவை அணிந்திருக்கவில்லை மாறாக ஒரு ஆன்டெனாவை இயற்கையாகவே ஒரு உடலுறுப்பை போல் பெற்றுள்ளேன் என நினைத்துக் கொள்வதாலேயே என்னால் இதை உடலின் ஒரு உறுப்பாக பாவிக்க முடிகிறது என கூறுகிறார் இந்த 'அரை ரோபோ மனிதன்' அதாவது மனிதனும் இயந்திரமும் ஒன்றாக கலந்து போன கலவை இவர்.

நீல் ஹார்பிஸ்ஸன் 'சைபோர்க் ஃபவுன்டேசன்' (Cyborg Foundation) எனும் சர்வதேச அமைப்பின் துணை நிறுவனராக உள்ளார். இந்த அமைப்பு சைபோர்க்குகளின் சர்வதேச உரிமைகளை பாதுகாப்பது, சைபோர்க் எனும் நவீனக்கலையை பரப்புவது மற்றும் சைபோர்க்குகளாக மாறுபவர்களுக்கு ஆதரவாக செயல்படுவது போன்ற பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...