Pages

Sunday, February 4, 2018

ஜப்பானில் காபி தயாரித்து வழங்கும் ரோபோ டீக்கடை திறப்பு (படங்கள்)

அதிரை நியூஸ்: பிப்.04
ஜப்பானில் ரோபோக்கள் பயன்பாடு என்பது ஆச்சரியமான செய்தியில்லை தான் என்றாலும் சில புதிய முயற்சிகள் ஜப்பானிய ரோபோக்களை பற்றி பேச வைத்துவிடும். 'சாயர்' (Sawyer) எனப் பெயரிடப்பட்டுள்ள ரோபோக்கள் காபி தயாரித்து வழங்கும் டீக்கடை தலைநகர் டோக்கியோவின் வர்த்தக பிராந்தியமான ஷிபுயா (Shibuya) பகுதியில் "Strange cafe" என்று ஜப்பானிய மொழியில் அர்த்த வரும் காபிக்கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

ஒற்றைக் கையுடைய இந்த ரோபோவிடம் வெண்டிங் மெஷினில் இருந்து பெறப்படும் டோக்கனை கொடுத்தால் அதை ஸ்கேன் மூலம் படித்து உங்களுக்குத் தேவையான காபி, கப்புச்சினொ, ஹாட் சாக்லேட், கிரீன் டீ போன்ற பலவிதமான பானங்களை தயாரித்துத் தரும். மேலும் நீங்கள் டோக்கனை தரும் போதே வாழ்த்தி வரவேற்கும். மேலும் என்னுடைய காபியை போன்று நல்ல காபியை இங்கு சுற்றியுள்ள எந்த மனிதராலும் தயாரித்து தர முடியாது என்று அதன் கார்ட்டூன் கண்களைத் துருத்தி சவால் விடும்.

இந்த ரோபோ தயாரித்து தரும் காபி ஒன்றின் விலை 320 ஜப்பானிய யென்கள் (3 டாலர்). இந்த காபி தயாரிக்கும் ரோபோவுடன் பல வாடிக்கையாளர்கள் குறிப்பாக இளைஞர்கள் ஆர்வமுடன் செல்ஃபி எடுத்துச் செல்கின்றனர். ஒரே நேரத்தில் 5 பேருக்கு காபி தயாரித்து கொடுக்கவல்லது இந்த சாயர் ரோபோ.

Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...