Pages

Sunday, February 4, 2018

பூமியை நோக்கி பிரமாண்ட எரிகல் (வீடியோ)

அதிரை நியூஸ்: பிப்.04
அமீரக நேரப்படி திங்கட்கிழமை (5 ஆம் தேதி துவங்கும் போது) அதிகாலை 1.30 மணியளவில் (அதாவது ஞாயிற்றுக்கிழமை 4 ஆம் தேதி நள்ளிரவு) பூமிக்கு அருகே பிரம்மாண்டமான ஒரு எரிகல் கடந்து செல்லவுள்ளது. (இந்திய நேரப்படி சரியாக நள்ளிரவு 12 மணி பிப்ரவரி 4/5 தேதி)

பூமிக்கு இதனால் ஆபத்தில்லை என்பதுடன் எதிர்வரும் 100 ஆண்டுகளுக்குள்ளும் இந்த எரிகல் பூமியின் மீது மோத வாய்ப்பில்லை என இந்த எரிகல் கண்டுபிடிக்கப்பட்ட 2002 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதன் சுற்றுப்பாதையை கண்காணித்து வரும் Near-Earth Object Studies at the Jet Propulsion Laboratory, in California தெரிவித்துள்ளது.

இந்த விண்கல்லிற்கு 2002 AJ129  என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன் அளவு சுமார் 0.5 கி.மீ (0.3 மைல்) முதல் 1.2 கி.மீ (0.75 மைல்) இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பூமிக்கும் நிலவுக்கும் இடைப்பட்ட தூரத்தைப் போல் 10 மடங்கு தூரத்தில் இது பயணிக்கும் அதாவது 4.2 மில்லியன் கி.மீ (2.6 மில்லியன் மைல்கள்) தூரத்தில்.

இந்த விண்கல் பயணிக்கும் சுற்றுப்பாதையை விவரிக்கும் நாஸா வெளியிட்டுள்ள விவர வீடியோ இது,



கடந்த 2018 ஜனவரி 16 ஆம் தேதி அமெரிக்காவின் மிச்சிகனுக்கு மேலே ஒரு விண்கல் வெடித்துச் சிதறியது, இந்த வெடிப்பின் சக்தி 2.0 ரிக்டர் அளவு பூகம்பத்திற்கு ஈடானது. அதன் வீடியோ பதிவு இதோ,



கடந்த 2013 ஆம் ஆண்டு ஒரு விண்கல் எரிந்து அதன் சின்னஞ்சிறு சிதறல்கள் ரஷ்யாவின் மீது சிதறியதில் சுமார் 500 பேர் காயமடைந்தனர். அதன் வீடியோ பதிவு இது,



Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...