Pages

Tuesday, February 13, 2018

மும்பையில் நேருக்கு நேர் வானில் மோதவிருந்த விமான விபத்து தவிர்ப்பு!

அதிரை நியூஸ்: பிப்.13
சம்பவம் : 1
மும்பை வானில் வெறும் 100 மீட்டர் இடைவெளியில் வானில் மோதவிருந்த 2 விமானங்களின் பைலட்டுகளின் கடைசி நேர சுதாரிப்பால் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. விபத்து நேரவிருந்த விஸ்தரா மற்றும் ஏர் இந்தியா விமானங்களை இயக்கியவர்கள் அனைவரும் பெண் பைலட்டுகளே.

டெல்லியிலிருந்து பூனேவுக்கு 152 பயணிகளுடன் 'விஸ்தரா' நிறுவன விமானம் சென்று கொண்டிருந்தது. அதன் எதிர் திசையில் மும்பை – போபால் இடையேயான ஏர் இந்தியா விமானம் 109 பயணிகளுடன் மும்பைக்கு மேல் வந்து கொண்டிருந்தது.

பொதுவாக 2 விமானங்களுக்கிடையேயான செங்குத்தான உயரம் குறைந்தது 1,000 அடி இருக்க வேண்டும் என்பது விதி ஆனால் விஸ்தரா விமானம் 27,100 அடியில் பறந்து கொண்டிருந்த போது ஏர் இந்தியா விமானம் 27,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. இரண்டுக்குமிடையேயான தூரம் வெறும் 100 அடிகள் மட்டுமே.

வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையுடன் (Air Traffic Control Room) நடைபெற்ற உரையாடலின் போது ஏற்பட்ட குழப்பமே இச்சம்பவத்திற்கு காரணமாக இருக்கக்கூடும் என தெரிய வந்துள்ளது. அனைவரும் பெண் பைலட்டுகளாக இருந்ததால் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையிலிருந்து (ATC) தொடர்பு கொள்ளும் போது யாருடன் தொடர்பு கொள்கின்றோம் என்கிற ரீதியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

மேலும் ஏர் இந்தியா விமானிகள் வான் கட்டுப்பாட்டு அறையின் கட்டளையின் படி பறந்துள்ள நிலையில் புரிந்து கொள்வதில் தவறிழைத்த விஸ்தரா விமான பைலட்டுகள் மட்டும் விசாரணைக்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் : 2

http://www.independent.co.uk/fdada539-d265-4fa1-80c2-b129c4ce5275

https://youtu.be/C-Gzlk02vKk

ரஷ்யாவின் சரடோவா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று ரஷ்யாவின் டொமடிடோவா விமான நிலையத்திலிருந்து கஜாக்கிஸ்தான் எல்லையருகேயுள்ள ஓர்ஸ்க் நகருக்கு புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்தில் சிக்கியது. இந்த விமானத்தில் இருந்த 71 பேரும் உயிரிழந்துவிட்டனர். இந்த விபத்திற்கு காரணம் ஹெலிகாப்டர் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியது அல்லது கடும் பனியின் காரணம் நிலவிய மங்கலான சூழல் இருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றது.

சம்பவம் : 3
நைஜீரியாவின் லகோஸ் நகரிலிருந்து அபூஜாவுக்கு சென்ற டானா ஏர் என்ற விமானம் தரையிறங்கிய உடனேயே அவசரவழி கதவு (Emergency Exit Door) ஒன்று விழுந்து நொறுங்கியுள்ளது. கதவு தானாக விழ வாய்ப்பில்லை பயணி யாரோ ஒருவர் விளையாடி இருக்கிறார் என விமான நிறுவனம் பழிபோட, பயணிகளோ பறக்கும் போதே தடதடவென கதவு ஆட, நாரசமான சத்தம் வந்து கொண்டே இருந்தது, உயிரைப் பிடித்துக் கொண்டு வந்தோம் என விமான நிறுவனத்தின் மீது குற்றம்சாட்டுகின்றனர்.

Sources: Msn / The Guardian / The Independent / BBC
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...