Pages

Thursday, February 1, 2018

அமெரிக்காவில் விமானத்தில் பறக்க மயிலுடன் வந்த பெண்!

அதிரை நியூஸ்: பிப்.01
வித்தியாசமான பிராணிகள், பறவைகளை வளர்ப்பது சிலரின் பொழுதுபோக்கு. அதிலும் சிலர் மிக ஆபத்தான பிராணிகளைக்கூட வளர்ப்புப்பிராணிகளாக வளர்த்து வருகின்றனர். ஒரு சிலரின் மரணங்கள் கூட அந்த வளர்ப்புப் பிராணிகளாலேயே நிகழ்ந்துள்ளன. எடுத்துக்காட்டு: சமீபத்தில் வளர்ப்பு மலைப்பாம்பால் உயிரிழந்த ஒரு அமெரிக்கர். ( https://www.theguardian.com/environment/2018/jan/24/python-owner-killed-8ft-long-coroner-dan-brandon )

வேறு சில வளர்ப்பு பிராணிகள் வளர்ப்போர் அடிக்கும் கூத்துக்கள் சிரிப்பையும் சில நேரம் கோபங்களை வரவழைக்கும் தன்மையுள்ளவை. அமெரிக்காவில் ஒரு பெண் 'நெவார்க் லிபர்ட்டி சர்வதேச விமான நிலையத்திலிருந்து' தனது மயிலுடன் பறக்க வந்திருந்தார். மயிலுக்கான டிக்கெட்டையும் எடுத்திருந்தார் என்றாலும் சர்ச்சைகளுக்கு புகழ்பெற்ற யுனைடெட் ஏர்லைன்ஸ் மயிலை அனுமதிக்க மறுத்துவிட்டது.

மயிலை அனுமதிக்க முடியாது என்று ஏற்கனவே 3 முறை வெவ்வேறு தருணங்களில் விளக்கம் சொல்லப்பட்டும் அந்த பெண் மயிலுடன் வம்படியாக வந்தார் என தனது செயலுக்கு விளக்கமளித்துள்ளது. அப்போ சமூக வலைத்தளங்கள் என்ன செய்கின்றன? உலக நியதியின்படி வழமைபோல் ஆதரவு, எதிர்ப்புக் கருத்துக்களால் அதிர்ந்து கொண்டுள்ளது.

Sources: Fox News / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...