Pages

Wednesday, February 14, 2018

அமீரக இந்திய தொழிலாளர்களுக்கு உதவும் இருநாடுகளின் கூட்டு இணையதளம் விரைவில் அறிமுகம்!

அதிரை நியூஸ்: பிப்.14
அமீரகத்தில் வேலைதேடும் ப்ளுகாலர்ஸ் எனப்படும் சாதாரண இந்திய தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் சிறப்பு இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த இணையதளம் ஏற்கனவே செயல்பட்டு இந்திய அரசின் என்ற இணையதளத்துடன் ஒன்றாக இணைக்கப்படும். இதன் மூலம் சாதாரண தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாப்பு மேலும் உறுதி செய்யப்படும்.

இந்திய தொழிலாளர்களுக்கு என்றே பிரத்தியேகமாக அமீரக அரசால் உருவாக்கப்படும் இந்த இணையதளத்தில் அமீரகத்திலுள்ள அவர்களுக்கேற்ற வேலைவாய்ப்பு குறித்த தகவல்கள், வேலைவாய்ப்பிற்கான விண்ணப்ப படிவம், பரஸ்பர ஷரத்துக்களுடன் கூடிய வேலை ஓப்பந்த பத்திரம் ஆகியவை இடம் பெற்றிருப்பதுடன் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்வதற்கு ஏற்றவாறு மாதிரி விண்ணப்பப் படிவம் மற்றும் மாதிரி வேலை ஒப்பந்தமும் இடம்பெற்றிருக்கும்.

பொதுவாக இந்தியாவிலிருந்து அழைத்து வரப்படும் தொழிலாளர்களுக்கு இந்தியாவில் இருக்கும் போது கவர்ச்சிகரமான சம்பள விபரங்கள் மற்றும் சலுகைகள் வேலை ஒப்பந்தங்களில் இடம் பெற்றிருக்கும். அமீரகத்திற்கு வந்தவுடன் வேறொரு வேலை ஒப்பந்தம் வழங்கப்பட்டு ஏமாற்றப்படுகின்றனர். திட்டமிடப்பட்டுள்ள இந்த புதிய இணையதளத்திலேயே வேலை ஒப்பந்த விபரங்கள் உறுதி செய்யப்பட்டுவிடுவதால் இங்கு வருகை தந்தபின் இனி ஏமாற்ற முடியாது.

இந்திய அரசின் சார்பாக ப்ளுகாலர்ஸ் எனப்படும் சாதாரண தொழிலாளர்கள் (Un-Skilled Workers), கடலோடிகள் (Sailors) மற்றும் நர்ஸூகளுக்கு (Nurses) உதவுவதற்காக eMigrate என்ற இணையதளம் செயல்பட்டு வருகிறது. இந்த இணையதளத்துடன் மேற்காணும் அமீரகத்தின் புதிய இணையதளம் அதிகாரபூர்வமாக இணைக்கப்பட்டு 2 நாட்டு அரசுகளாலும் நிர்வகிக்கப்படும், கண்காணிக்கப்படும். இதன் மூலம் இந்தியத் தொழிலாளர்களை வெளிப்படைத்தன்மையுடனும் நேர்மையான நெறிமுறைகளுடனும் வேலைக்கு அமர்த்தும் வழி ஏற்பட்டுள்ளதுடன் சர்ச்சைகள் ஏதும் ஏற்பட்டாலும் இதில் கண்டுள்ள விபரங்களின் அடிப்படையில் இரு நாட்டு அரசுகளும் அத்தொழிலாளருக்கு உதவும்.

இந்தியாவின் 2015 ஆம் ஆண்டின் இமிக்கிரேசன் சட்டப்படி 10 ஆம் வகுப்பு தேராத தொழிலாளர்கள் வெளிநாடுகளில் வேலை செய்ய கட்டாய தடையில்லா தகுதிச்சான்று ECR (Emigration Clearance Required) பெற வேண்டும் என்ற சட்டம் உள்ளது. இந்த ECR சட்டம் வளைகுடா நாடுகள் உட்பட மொத்தம் 18 நாடுகளுக்கு வேலைத்தேடிச் செல்லும் போது கட்டாயம் தேவைப்படும்.

2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி இயற்றப்பட்ட சட்டப்படி இந்தியாவிலிருந்து தகுதி பெற்ற நர்ஸூகளை தனியார் நிறுவனங்கள் மூலம் வெளிநாடுகள் வேலைக்கு எடுக்க தடைசெய்யப்பட்டுள்ளது, இந்திய அரசின் eMigrate என்ற இணையதளம் மூலமாக தவிர்த்து.

அதேபோல் 2016 ஆகஸ்ட் 2 ஆம் தேதி நீட்டிக்கப்பட்ட சட்டப்படி வீட்டு வேலைகளுக்கு இந்திய பெண்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்ப தடை செய்துள்ளது. வீட்டுப்பணிப் பெண்களும், நர்ஸூகளும் வெளிநாட்டு வேலைக்கு செல்லும் நிலை ஏதும் எற்பட்டால் இந்திய அரசின் 7 நேரடி நிறுவனங்கள் மூலம் மட்டுமே செல்ல முடியுமேயன்றி இந்திய அரசின் அனுமதி பெற்றுள்ள சுமாh ;1,200 தனியார் டிராவல் ஏஜென்ஸிக்கள் வழியாக செல்லக்கூட அனுமதியில்லை.

A Government of India order on August 2, 2016, further extended the ban to all female workers including domestic workers and authorized seven official agencies for the recruitment of all female workers including nurses. None of the 1,200 registered private recruitment agents in India are authorised to recruit nurses and female workers under ECR category.

அமீரக அரசால் திட்டமிடப்பட்டுள்ள இந்த புதிய இணையதளம் அமீரக மற்றும் இந்திய அரசின் இணையதளம் ஆகியவற்றின் இணைந்த சேவை சுமார் 3 முதல் 4 மாதங்களுக்குள் நடைமுறைக்கு வரும் என அமீரகத்திற்கான இந்திய தூதர் நவ்தீப் சிங் சூரி அவர்கள் தெரிவித்துள்ளார்.

Source: Gulf News
தொகுப்பு: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...