Pages

Friday, February 2, 2018

தஞ்சை மாவட்டத்தில் TNPSC குரூப் 4 தேர்வு நடத்துவது தொடர்பான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்!

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் போட்டித் தேர்வு  குரூப் 4 நடத்துவது தொடர்பான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் இன்று (02.02.2018) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்ததாவது;
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 போட்டித் தேர்வு வருகின்ற 11.02.2018 அன்று நடைபெறவுள்ளது.  குரூப் 4 போட்டித் தேர்விற்கு நமது மாவட்டத்தில் 62,458 தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளனர். 209 தேர்வு மையங்களில் 3111 தேர்வு கூடங்களில் தேர்வு எழுதவுள்ளனர். பதற்றமான தேர்வு மையங்களில் வேப் காமிரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளது. 

தேர்வுகளை கண்காணிப்பதற்கு 45 இயங்கு குழு  தேர்வு செய்து கண்காணிக்கப்படவுள்ளது.  209 ஆய்வு அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட வுள்ளனர். 39 பறக்கும் படை மூலம் கண்காணிக்கப்படவுள்ளது.  மேலும்  தேர்வு மையங்களில் கண்காணிக்க வீடியோ எடுக்கப்படும். நமது மாவட்டத்தில்  140  வீடியோ கிராபர்கள் பணியில் ஈடுப்படுத்தப்பட்டு தேர்வு நடைபெறுவதை ஒலிபதிவு செய்யவுள்ளார்கள்.

தேர்வு நடைபெறும் மையங்கள் மற்றும் வினாத்தாள் வைக்கப்படும் இடத்தில் போதுமான காவல் துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.  தேர்வு நடைபெறும் அறைக்குள் கைபேசி, கால்குலேட்டர் மற்றும் நவீன மின்னணு பொருட்கள் அனுமதிக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மின் வாரியத்தினர் தேர்வு நடைபெறும் நாளென்று தேர்வு மையம் அமைந்துள்ள பகுதிகளில் தடையற்ற மின்சாரம் வழங்கிட வேண்டும். தேர்வு மையத்தில் குடிநீர் மற்றும் சுகாதாரப்பணிகள் அந்தந்த பகுதியை சேர்ந்த மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி அலுவலர்கள், பேரூராட்சி மேற்கொள்ள வேண்டும். போக்குவரத்து துறையின் மூலம் தேர்வு நடைபெறும் நாளென்று தேர்வு நடைபெறும் வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். உயர்க்கல்வி மற்றும் பள்ளி கல்வித்துறை அலுவலர்கள் தேர்வு மையங்களில் அடிப்படை வசதிகளான இருக்கை, மின்விசிறி, லைட், குடிநீர், கழிவறை ஆகிய வசதிகளை உறுதி செய்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், கும்பகோணம் சார் ஆட்சியர் பிரதீப்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செந்தாமரை, வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராசு (பட்டுக்கோட்டை), மாவட்ட கருவூல அலுவலர் நடராஜன், வட்டாட்சியர் தங்கபிரபாகரன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...