Pages

Saturday, March 3, 2018

தஞ்சை மாவட்டத்தில் மார்ச் 1 முதல் ஸ்மார்ட் கார்டு மூலம் ரேஷன் பொருட்கள்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் தகுதியான அனைத்து குடும்பங்களுக்கும் தமிழக அரசின் மின்னணு குடும்ப அட்டைகள் (Smart Cards) வழங்கப்பட்டுவிட்டன. பொது விநியோகத் திட்டத்தின்கீழ் 01-03-2018 முதல் மின்னணு குடும்ப அட்டைகளின் மூலமாக அந்தந்த குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே அத்தியவாசியப் பொருட்கள் வழங்கப்படும். எனவே, மின்னணு குடும்ப அட்டைகளை அவர்களுக்குரிய நியாயவிலை அங்காடிகளுக்கு எடுத்துச்சென்று தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழான அத்தியாவசியப் பொருட்களைப் பெற்று பயனடையுமாறு அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பழைய குடும்ப அட்டைதாரர்கள் எவருக்கேனும் மின்னணு குடும்ப அட்டை (Smart Cards) இதுவரை வரப்பெறவில்லை என்றால், தேவையான ஆவணங்களுடன் தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலரை தொடர்பு கொள்ளலாம். மேலும், பொது விநியோகத் திட்டத்தின் கீழான அத்தியாவசியப் பொருட்கள் தேவைப்படாத குடும்ப அட்டைதாரர்கள் https://www.tnpds.gov.in/ என்ற இணைய தளத்திற்குச் சென்று குடும்ப அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள 10 இலக்க கைபேசி எண்ணை உள்ளீடு செய்து, தற்காலிகமாகவும், நிரந்தரமாகவும் பொருட்களை விட்டுக் கொடுக்கலாம் (Give it up). நிரந்தரமாக அத்தியாவசியப் பொருட்களை விட்டுக்கொடுக்க விரும்பும் குடும்ப அட்டைதாரர்கள் அவர்களது குடும்ப அட்டைகளை பொருட்கள் வேண்டா குடும்ப அட்டைகளாக  (None Cards) மாற்றிக் கொள்ளுமாறும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ,அண்ணாதுரை கேட்டுக் கொண்டுள்ளார்.

1 comment:

  1. I was more than happy to uncover this great site. I need to to thank you for your time due to this fantastic read!! I definitely enjoyed every bit of it and I have you bookmarked to see new information on your blog.
    tnpds
    tnpds
    doctors day quotes
    last week tonight tickets

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...