Pages

Thursday, March 22, 2018

ஷார்ஜாவில் 2 வருடங்கள் பூரணமாக பாலூட்டிய 40 தாய்மார்கள் கவுரவிப்பு!

அதிரை நியூஸ்: மார்ச் 22
அமீரகம், ஷார்ஜாவில் 2 வருடங்கள் பூரணமாக பாலூட்டிய 40 தாய்மார்கள் கவுரவிக்கப்பட்டனர்.

இஸ்லாத்தில் என்னாளும் அன்னையர் தினங்களே! எனினும் சர்வதேச சமூகம் வருடந்தோறும் மார்ச் 21 ஆம் தேதியை சர்வதேச அன்னையர் தினம் என சடங்குபூர்வமாக கடைப்பிடித்து வருகிறது. இவ்வன்னையர் தின அனுசரித்தலின் ஒரு பகுதியாக ஷார்ஜா அரசின் குடும்ப விவகாரங்களுக்கான உயர்மட்ட கவுன்சிலின் (The Supreme Council for Family Affairs in Sharjah) ஒரு அங்கமாக செயல்படும் 'தாய்பாலூட்டும் தோழிகளின் சங்கம்' (The Friends of Breastfeeding Association) 40 அன்னையர்களை பாராட்டி கவுரவித்தது.

குழந்தைகளை ஈன்று, ஊட்டச்சத்து மற்றும் பராமரிப்பில் சமரசமற்று கவனம் செலுத்தி வளர்க்கும் அன்னையர்களின் தியாகம் வெறும் எழுத்தில் வடிப்பதல்ல. 2 வருடங்கள் முழுமையாக பாலூட்டி வளர்க்கப்படும் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி, ஆரோக்கியம் போன்றவை தன்னிகரற்ற வகையில் உயர்ந்து காணப்படுவதுடன் உடல் வலுவும் உளவியலும் அதிகரித்து காணப்படும். மேலும் வேலைப்பளுவின் காரணமாக சஞ்சலமாகும் பாலூட்டும் தாய்மார்களின் மனங்கள் அமைதி பெறவும் பெரிதும் உதவுகின்றன.

மேலும் பல்வேறு நன்மைகளை தன்னகத்தே கொண்டுள்ள தாய்ப்பால் ஊட்டுதலை 2 வருடங்கள் சரியாக மேற்கொண்ட மேற்காணும் சங்கத்தின் அங்கத்தினர்களான சுமார் 40 தாய்மார்கள் பாராட்டி கவுரவிக்கப்பட்டனர். மேலும் இளம் வயது முதல் சற்றே கூடுதலான 4 வெவ்வேறு வயது வித்தியாசங்களுடைய தாய்மார்கள் தங்களுடைய தாய்ப்பாலூட்டிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டது பிற தாய்மார்களுக்கும், இளந்தாய்களுக்கும் விழிப்புணர்வூட்டும் ஒன்றாக அமைந்தது.

இதையே அல்குர்ஆன் சுமார் 1440 வருடங்களுக்கு முன் இவ்வாறு அறிவுறுத்துகிறது...

31:14   وَوَصَّيْنَا الْاِنْسٰنَ بِوَالِدَيْهِ‌ۚ حَمَلَتْهُ اُمُّهٗ وَهْنًا عَلٰى وَهْنٍ وَّفِصٰلُهٗ فِىْ عَامَيْنِ اَنِ اشْكُرْ لِىْ وَلِـوَالِدَيْكَؕ اِلَىَّ الْمَصِيْرُ‏ 

31:14. நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன; ஆகவே “நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக; என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.”

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...