Pages

Sunday, March 25, 2018

ஆக்ஸ்போர்ட் மெட்ரிக். பள்ளியில் யோகா பயிற்சி ~ 320 மாணவ, மாணவிகள் பங்கேற்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், மார்ச் 25
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம், புதுக்கோட்டை உள்ளூர், ஆக்ஸ்போர்டு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் யோகா பயிற்சி  சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த பள்ளி முதல்வர் என்.உதயகுமார் யோகா பயிற்சியை வழங்கினார். இதில், 4 ஆம் வகுப்பு முதல், 9 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவ, மாணவிகள் 320 பேர் கலந்துகொண்டு பத்மாசனம், வஜ்ராசனம், சூரிய நமாஸ்காரம், உட்கட் ஆசனம்,  விருட்சாசனம், திரிகோணாசனம், சர்வங்காசனம், ஹலாசனம், பவன முத்தாசனம் உள்ளிட்ட  20 வகையான ஆசனப் பயிற்சியை செய்தனர்.

சிறப்பு விருந்தினர்களாக, கல்லூரிப் பேராசிரியர்கள் எஸ். சந்திரசேகர், எஸ். பி.கணபதி, என். சேகர், நர்சரி பள்ளித்தாளாளர்கள் ராமலிங்கம், பெரியண்ணன், கிரிராஜன், நவநீதம், அடைக்கலம் மற்றும் பெற்றோர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார்கள். முடிவில் பள்ளி முதுகலை ஆசிரியர் போஸ் ராஜா நன்றி கூறினார்.

1 comment:

  1. நல்ல முயற்ச்சி வாழ்த்துக்கள்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...