Pages

Saturday, March 3, 2018

குவைத்தில் ஒரே நாளில் விடுமுறை எடுத்த 40,000 ஊழியர்கள்!

அதிரை நியூஸ்: மார்ச் 03
குவைத்தில் பெருநாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்கள் வரும்போதெல்லாம் அரசு ஊழியர்களில் கணிசமானோர் உடம்பு சரியில்லை எனக்கூறி விடுமுறையை நீட்டிப்பு செய்து வரும் போக்கு அதிகரித்துள்ளது.

குவைத் நாட்டின் தேசிய தினம், விடுதலை தினம் மற்றும் குவைத் அமீர் பதவியேற்ற தினம் ஆகியவை கொண்டாடப்பட்டதை அடுத்து வெள்ளி, சனி வார விடுமுறைகளை தொடர்ந்து வந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளையும் பொதுவிடுமறையாக குவைத் அரசு அறிவித்திருந்தது. இதன் வழி அரசு ஊழியர்களுக்கு 4 நாள் தொடர் விடுமுறை கிடைத்தது.

குவைத் அரசு ஊழியர்களோ இன்னும் ஒரு படி மேலே போய் தொடர்ந்து வந்த செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய 3 நாட்களுக்கு மருத்துவ விடுப்பு சான்றிதழை அளித்துவிட்டு எதிர்வரும் சனிக்கிழமை வரை தொடர்ந்து 9 நாட்களுக்கு தொடர் விடுமுறையை ஜாலியாக கொண்டாடி வருகின்றனர்.

ஒரே நேரத்தில் சுமார் 40,000 அரசு ஊழியர்கள் விடுப்பு எடுத்துள்ளனர் அதிலும் குறிப்பாக மருத்துவத் துறையைச் சேர்ந்த ஊழியர்களில் 5 சதவிகிதம் பேரும் இதில் அடக்கம் என்பதையறிந்து அரசு தீவிரமாக விசாரித்து மேல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ விடுப்பு சான்றிதழ்களை அதனை வழங்கிய மருத்துவர்களின் அன்றாட ஆன்லைன் மருத்துவப் பதிவுகளுடன் ஒப்பிட்டு தவறான மருத்துவ விடுப்பு சான்றிதழை வழங்கிய அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என குவைத் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...