Pages

Tuesday, March 20, 2018

ராம ராஜ்ய ரதயாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிராம்பட்டினத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 44 பேர் கைது (படங்கள்)

அதிராம்பட்டினம், மார்ச் 20
தமிழகத்தில் ராம ராஜ்ய ரதயாத்திரையை தடை செய்ய வலியுறுத்தியும்,  ரதயாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களின் கைதை கண்டித்தும், அவர்களை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும், திமுக, எஸ்.டி.பி.ஐ, தமுமுக சார்பில், அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திமுக சார்பில்...
அக்கட்சியின், அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் இராம. குணசேகரன் தலைமை வகித்தார். இதில், தமிழகத்தில் ராம ராஜ்ய ரதயாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட திமுக மாநில செயல் தலைவர் மு.க ஸ்டாலின் கைதை கண்டித்தும், ரதயாத்திரையை தடை செய்ய வலியுறுத்தியும் கண்டன முழக்கமிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில்...
அக்கட்சியின், தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் இசட். முகமது இலியாஸ் தலைமை வகித்தார். தமிழகத்தில் ராம ராஜ்ய ரதயாத்திரையை தடை செய்ய வலியுறுத்தியும், செங்கோட்டை போராட்டத்தில் கைது செய்யப்பட்ட எஸ்டிபிஐ கட்சியினர் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்யக் கோரி முழக்கமிட்டனர். இதில், பி.எப்.ஐ தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் ஏ.ஹாஜா அலாவுதீன், எஸ்டிபிஐ கட்சி தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர்கள் அபுல் ஹசன், முகமது புஹாரி, எஸ்டிபிஐ கட்சி அதிரை பேரூர் தலைவர் அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட 19 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமுமுக சார்பில்...
அவ்வமைப்பின், மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ஓ செய்யது முகமது புகாரி தலைமை வகித்தார். கண்டன ஆர்ப்பாட்டடத்தில், தமிழகத்தில் ராம ராஜ்ய ரதயாத்திரையை தடை செய்ய வலியுறுத்தியும், செங்கோட்டை போராட்டத்தில் கைது செய்யப்பட்ட தமுமுக / மமக உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்யக்கோரி முழக்கமிட்டனர்.
 
 
  

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...