Pages

Monday, March 26, 2018

சவுதியில் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய போயிங் விமான சேவை!

அதிரை நியூஸ்: மார்ச் 26
சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் போயிங் விமானத்தை அன்பளிப்பாக பெற்ற சவுதி அரேபியா அதன் முதல் சேவையும்

அமெரிக்காவின் போயிங் விமான நிறுவனம் பயணிகள் ஜெட், விண்வெளி ராக்கெட்டுகள் மற்றும் விண்வெளி ஓடங்கள், ராணுவ விமானங்கள், பாதுகாப்புத் துறை சார்ந்த தயாரிப்புக்கள் என பிரம்மாண்டமாக வளர்ந்துள்ளது அறிந்ததே. போயிங் நிறுவனத்திலிருந்து பல்வேறு வகையான தயாரிப்புக்களையும் வாங்கிக் குவிக்கும் அதன் முக்கிய வாடிக்கையாளராகவும் சவுதி அரேபியா திகழ்கிறது.

இவ்வர்த்தக பிணைப்பு எவ்வாறு நிகழ்ந்தது? சுமார் 70 வருடங்களுக்கு முன் அதாவது 1945 ஆம் வருடம் பிப்ரவரி 14 ஆம் தேதி அன்றைய அமெரிக்கா ஜனாதிபதி பிராங்கிளின் ரூஸ்வெல்ட் என்பவர் அன்றைய சவுதி அரேபியாவின் மன்னரும், சவுதி அரேபியா என்ற நாட்டின் ஸ்தாபகருமான மன்னர் அப்துல் அஜீஸ் அவர்களுக்கு போயிங் நிறுவனத்தின் இரட்டை எஞ்சினுடைய டி3 டகோட்டா (a twin-engine DC-3 Dakota airplane) என்ற பயணிகள் விமானத்தை அன்பளிப்பாக வழங்கி சவுதி அரேபியாவின் வான் போக்குவரத்திற்கு அடித்தளமிட்டுள்ளனர். (சின்ன மீனப் போட்டு பெரிய மீன புடிக்கிறது என்கிற பழமொழி ஞாபகம் வந்துச்சா!)

சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் என்ற பெயரில் துவக்கப்பட்ட இந்த விமான நிறுவனத்தை ஆரம்பத்தில் சவுதியின் ராணுவம் நிர்வகித்துள்ளது. சவுதி ராணுவத்தின் சார்பாக அமெரிக்காவின் TWA - Trans World Airlines ( It was formed as Transcontinental & Western Air) என்கிற நிறுவனம் விமான போக்குவரத்தை ஒழுங்கு செய்து வந்துள்ளது.

1947 ஆம் ஆண்டு தான் தனது முதலாவது சர்வதேச போக்குவரத்தை ஜித்தா – கெய்ரோ இடையே துவக்கியதுடன் மேலும் 5 டகோட்டா டி3 விமானங்களை வாங்கி ஜித்தா (Jeddah) – ரியாத் (Riyadh) - ஹொபூப் (Hofuf) - தஹ்ரான் (Dhahran) இடையே உள்நாட்டு சேவையிலும் ஈடுபட்டுள்ளது. இன்று சுமார் 85 சர்வதேச தடங்களில் பறந்து வருவது குறிப்பிடத்தக்கது, இவற்றில் பல தடங்கள் ஹஜ் காலங்களில் மட்டும் பயன்படுபவை.

இந்த விமானத்தின் மூலம் முதன்முதலாக அன்றைய பிரிட்டீஷ் காலனி ஆட்சியின் (British Mandate) கீழிருந்த பாலஸ்தீன் நாட்டின் லைடா விமான நிலையத்திலிருந்து ஹஜ் யாத்ரீகர்களை கொண்டு வர பயன்படுத்தியுள்ளனர். (The airline's early operations was a special flight from Lydda in Palestine (today Lod in Israel, site of Ben-Gurion International Airport), a British Mandate at that time, to carry Hajj pilgrims to Jeddah). இன்று பாலஸ்தீனின் விமான நிலையம் இருந்த பகுதி யூத இஸ்ரேலிய கொடுங்கோலர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு லோட் என அழைக்கப்பட்டு வருகிறது, இது இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள பகுதியாகும்.

Source: Arab News / Wikipedia
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...