Pages

Saturday, March 10, 2018

அதிராம்பட்டினத்தில் முஸ்லிம் லீக் 71 வது நிறுவன நாள் கொண்டாட்டத்தில் மூத்த உறுப்பினர்கள் கெளரவிப்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், மார்ச் 10
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 71 வது நிறுவன நாள் கொடியேற்றம், மூத்த உறுப்பினர்கள் கெளரவிப்பு நிகழ்ச்சி அதிராம்பட்டினம் அலுவலகத்தில் சனிக்கிழமை காலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன் தலைமை வகித்தார். பொருளாளர் கவிஞர் ஏ.ஷேக் அப்துல்லா, துணைச் செயலாளர் அபூபக்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாநில துணைத்தலைவர் எஸ்.எஸ்.பி நசுருதீன் கலந்துகொண்டு பேசியது;
'இந்திய நாட்டின் சுதந்திரம், முஸ்லிம்களின் கல்வி, வேலை வாய்ப்பு போன்றவற்றை முன்னிறுத்தி, கடந்த 1906 டிசம்பர் 30 அன்று அன்றைய மேற்குவங்கம் டாக்காவில் (இன்றைய வங்காளதேசத் தலைநகர்) அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சி தொடங்கப்பட்டது.

நாடு விடுதலைக்குப் பின், இந்திய முஸ்லிம்களுக்காக சென்னை ராஜாஜி ஹாலில் 1948 மார்ச் 10 ம் நாள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை காயிதே மில்லத் தொடங்கினார். கடந்த 70 ஆண்டுகளில் இந்தியத் திருநாட்டில் தேசிய ஒருமைப்பாடு, சமய நல்லிணக்கம், சிறுபான்மையினரின் தனித்தன்மைகளை காத்தல் என்ற லட்சியங்களுக்காக இப்பேரியக்கம் ஆற்றி வரும் பணிகள் ஏராளம்' என்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட அதிராம்பட்டினம், அல் மதரசத்துர் ரஹ்மானியா அரபிக் கல்லூரி பேராசிரியர் தேங்கை சரபுதீன் முஸ்லீம் லீக் கொடியை ஏற்றி வைத்தார்.

இதில், கட்சியின் மூத்த உறுப்பினர்களும், தமிழ்நாடு இஸ்லாமிய இலக்கியக் கழக நெறியாளர் கவிஞர் மு.முஹம்மது தாஹா, அதிராம்பட்டினம், அல் மதரசத்துர் ரஹ்மானியா அரபிக் கல்லூரி பேராசிரியர் தேங்கை சரபுதீன், முன்னாள் உதவித் தலைமை ஆசிரியர் என்.எம் முகமது ஹனீபா ஆகியோரின் நீண்டகால சேவையைப் பாராட்டி சால்வை அணிவித்து கெளரவிக்கப்பட்டது.

மேலும், கட்சிக்காக தொடர் சேவைப் பணியாற்றி மறைந்த அதிராம்பட்டினம் மு.க ஹபீப் முகம்மது, மு.மு. முகம்மது ஹுசைன், அ.மு.க ஹனிபா ஹாஜியார், ஹம்ஜா, சேக்கா மரைக்காயர், இப்ராஹிம், என்,ஏ, ஜெக்கரியா, முகம்மது ஆலம், மு.மு முகம்மது ஹுசைன் ஆகியோரின் மறுமை வாழ்வு சிறக்க, அவர்களுக்காக 'யாசின்' ஓதி, சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டன. மேலும், அதிராம்பட்டினம் அஜ்மீர் ஏஜென்ஸிஸ் உரிமையாளர் ஹாஜி. எம்,ஏ, முகம்மது சாலிஹ், கே.எஸ்.ஏ அப்துர் ரஹ்மான் ஆகியோரின் உடல் ஆரோக்கியத்திற்கு பிரார்த்தனை செய்யப்பட்டன.

முன்னதாக, கட்சியின் மாவட்ட ஊடகப்பிரிவு பொறுப்பாளர் ஏ.சாகுல் ஹமீது வரவேற்றுப் பேசினார். முடிவில் மாவட்ட பிரதிநிதி ஜமால் முகமது நன்றி கூறினார். இவ்விழாவில், முஸ்லீம் லீக் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...