Pages

Saturday, March 10, 2018

செல்போன் தொடர் திருட்டு ~ காவல்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

பேராவூரணி. மார்ச்.10-
பேராவூரணி பகுதியில் நடைபெறும் தொடர் செல்போன் திருட்டை கண்டுபிடிக்க காவல்துறை உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியில் கடந்த இரண்டு மாதங்களில் வீடுகளில் புகுந்து நூற்றுக்கணக்கான விலை உயர்ந்த செல்போன்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். குறிப்பாக விசேசம் நடைபெறும் வீடுகளில் திருமணம், துக்கம், கிரகப்பிரவேசம் போன்ற நிகழ்ச்சிகள்
நடைபெற்றதற்கு அடுத்த நாள் வீட்டில் உள்ளவர்கள் அயர்ந்து தூங்குவார்கள் என்பதால், இதனை குறிவைத்து  விசேச வீடுகளில் புகுந்து திருடுவது வாடிக்கையாக உள்ளது.

அண்மையில் மட்டும் விசேச வீடுகளில் புகுந்து, குறிப்பாக நீலகண்டன் இரண்டாவது தெருவில் 5 க்கும் மேற்பட்ட வீடுகளில்  ஐம்பதுக்கும் மேற்பட்ட  செல்போன்கள் திருடுபோய் உள்ளது. நவீன விஞ்ஞான வளர்ச்சியில் சைபர் கிரைம் உள்ளிட்ட பிரிவுகள் மூலம் செல்போன் திருட்டை எளிதாக கண்டுபிடிக்க வழியிருந்தும் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார்கள் புகார்களாகவே வழக்கு கூட பதியப்படாமல் உள்ளது.

எனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  சிறப்பு கவனம் செலுத்தி செல்போன் திருட்டை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...