Pages

Sunday, March 4, 2018

அமீரகத்தில் எமிரேட்ஸ் ஐடியை சுயமாக பூர்த்தி செய்து கொள்ளும் மின்னணு திட்டம் அறிமுகம்!

அதிரை நியூஸ்: மார்ச் 04
அமீரக பெடரல் அடையாள அட்டைகளுக்கான ஆணையம் The Federal Authority for Identity and Citizenship (FAI)  பெரும் நிறுவனங்களின் காலவிரயத்தை மிச்சப்படுத்தும் வகையில் தங்களது ஊழியர்களுக்கான எமிரேட்ஸ் ஐடி எனும் அடையாள அட்டைகளுக்கான மின்னணு விண்ணப்பங்களை சுயமாக பூர்த்தி செய்து பெற்றுக்கொள்ளலாம் என்ற நிபந்தனைகளுடன் கூடிய ஒரு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இத்திட்டத்தின்படி, ஒரு நிறுவனம் அல்லது ஒரு குழுமம் குறைந்தது 100 ஊழியர்களை கொண்டிருக்க வேண்டும். புதிய எமிரேட்ஸ் ஐடிக்கு விண்ணப்பிக்க அல்லது புதுப்பிக்க அல்லது தவறுகளை திருத்திக் கொள்ள இப்புதிய திட்டம் உதவும். நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு இம்மின்னணு திட்டத்தில் விண்ணப்பிப்பது குறித்து தேவையான பயிற்சிகள் வழங்கப்படும். விண்ணப்பத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எமிரேட்ஸ் ஐடிகளை அனுப்பும் பணிகளை மட்டும் அமீரக பெடரல் அடையாள அட்டைகளுக்கான ஆணையம் மேற்கொள்ளும்.

இந்த வசதிகளை பெறுவதற்கு பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதுடன் தனியாக ஒரு லைசென்ஸை ஒன்றையும் பெற வேண்டும் என்பதுடன் இது தொடர்பான ஒப்பந்தம் ஒன்றிலும் பரஸ்பரம் கையெழுத்திட வேண்டும். இதன்வழி 80 சதவிகித பணிகளே சுயதாக நிறுவனங்கள் ஆன்லைன் வழியாக முடிக்கும் நிலையில் அமீரக பெடரல் அடையாள அட்டைகளுக்கான ஆணையம் எஞ்சிய பணிகளை முடித்து அட்டையை அனுப்பித் தரும்.

Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...