Pages

Thursday, March 15, 2018

துபை விமான நிலையத்தில் வாகன பார்க்கிங் கட்டணம் உயர்வு (முழு விவரம்)

அதிரை நியூஸ்: மார்ச் 15
இவ்வுலகம் எத்தனையோ வகைக் காலங்களை கடந்து வந்துள்ளது. கற்காலம் (Stone Age), இரும்புகாலம் (Iron Age), வெண்கல காலம் (Bronze Age) என பல்வேறு கால நிலைகளை கடந்து வந்துள்ளது. அதேபோல் இன்று பாலைவனப் பிரதேசங்களாக இருப்பவை ஒரு காலத்தில் நதிகள் பாய்ந்தோடிய செழிப்புமிக்க பூமியாக இருந்துள்ளது, பனிப்பாறைகளால் மூடப்பட்டுள்ள அண்டார்டிகாவும் ஒரு காலத்தில் நிலப்பரப்பாகவே இருந்துள்ளது. தற்போது பாலைவனப் பிரதேசங்களில் வெண்பனியும் சிறுஅளவில் பெய்யத் துவங்கியுள்ள புவியியல் செய்திகளை படித்து வருகிறோம்.

ஆகா கால ஓட்டங்களில் மாற்றங்களும் நிகழும் என்பதைப் போல் வரி என்றால் என்றவென்றே தெரியாதிருந்த வளைகுடா நாடுகள் பல வாட், ஜிஎஸ்டி, கட்டண உயர்வுகளை ஒருசேர நடைமுறைப்படுத்தும் நிகழ்வுகள் பொருளியல் சூறாவளி சுழன்றடிக்கும் காலமோ இது என நம்பத் தோன்றுகிறது.

துபை விமான நிலைய கட்டண நிலவரம்:
துபை சர்வதேச விமான நிலையம் 3 முனையங்களாக செயல்பட்டு வருகின்றன, இங்குள்ள கார் பார்க்கிங்குகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்றுள்ளதால் கடந்த பத்தாண்டுகளில் முதன்முறையாக பார்க்கிங் கட்டணங்களை விலையேற்றியுள்ளோம் மேலும் இன்னும் 2 ஆண்டுகளுக்குள் சுமார் 3,500 கார்களை நிறுத்தக்கூடிய அடுக்குமாடி பார்க்கிங் ஒன்றையும் கட்டவுள்ளோம் என அறிவித்துள்ளது விமான நிலைய நிர்வாகம்.

இனி குறைந்தபட்ச நேரம் என்பது 1 மணிநேரமாக கணக்கிடப்படும். முதல் 1 மணிநேரத்திற்கு இதுவரை வசூலிக்கப்பட்ட 5 திர்ஹத்திற்கு பதிலாக 10 திர்ஹங்கள் வசூலிக்கப்படும். இந்த கட்டண உயர்வு தற்காலிக வாகன நிறுத்தங்களுக்கு உரியதாகும்.

முதல் 1 மணிநேரத்திற்கு long-term [B car park] எனப்படும் நீண்ட நேர பார்க்கிங்குகளில் கட்டணம் மணிக்கு 20லிருந்து 25 திர்ஹமாகவும், short-term [A car park] குறைந்த நேர பார்க்கிங்குகளில் கட்டணம் மணிக்கு 25லிருந்து 30 திர்ஹமாகவும் உயர்த்தப்படுகின்றது.

இதுகுறித்து விளக்கமளித்த விமான நிலைய நிர்வாகம், நீண்ட நேர பார்க்கிங்குகளில் 24 மணிநேரத்திற்கு வசூலிக்கப்பட்டு வந்த 280 திர்ஹத்திற்கு பதிலாக 55% தள்ளுபடிக்குப்பின் 125 திர்ஹமும், பிரிமியம் கார் பார்க்கிங்குகளில் வசூலிக்கப்பட்ட 140 திர்ஹத்திற்கு பதிலாக 39% தள்ளுபடிக்குப்பின் 85 திர்ஹமும் மட்டுமே வசூலிக்கப்படுகின்றன என தெரிவித்துள்ளது, இதில் 5 வாட் வரியும் உள்ளடக்கம் (Including VAT tax).

அபுதாபி விமான நிலைய பார்க்கிங் கட்டண நிலவரம்:
டெர்மினல் 1 மற்றும் 3 ஆகிய பார்க்கிங்குகளில் முதல் 1 மணிநேரத்திற்கு 20 திர்ஹமும் கூடுதல் ஒவ்வொரு மணிநேரத்திற்கும் மணிக்கு 10 திர்ஹமும் வசூலிக்கப்படுகிறது. டெர்மினல் 2 மற்றும் தோட்ட வடிவ பார்க்கிங்குகளில் (Garden Parking Lot) முதல் 1 மணிநேரத்திற்கு 10 திர்ஹமும் கூடுதல் ஒவ்வொரு மணிநேரத்திற்கும் 10 திர்ஹங்களும் வசூலிக்கப்படுகின்றன.

அதேபோல் டெர்மினல் 1 மற்றும் 3 ஆகிய பார்க்கிங்குகளில் நீண்டநேர அடிப்படையில் காரை நிறுத்த 24 மணிநேரத்திற்கு 240 திர்ஹமும், டெர்மினல் 2ல் 120 திர்ஹமும், வலெட் பார்க்கிங் (Valet parking) வசதிக்கு அனைத்து முனைய பார்க்கிங்குகளிலும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 75 திர்ஹமும் வசூலிக்கப்படுகின்றன.

ஷார்ஜா விமான நிலைய பார்க்கிங் கட்டண நிலவரம்:
முதல் 1 மணிநேரத்திற்கு 15 திர்ஹமும் தொடர்ந்து வரும் ஒவ்வொரு மணிநேரத்திற்கும் கூடுதலாக 10 திர்ஹமும் வசூலிக்கப்படுகிறது. நீண்டநேர பார்க்கிங் வசதியில் 24 மணிநேரத்திற்கு 245 திர்ஹமும் வசூலிக்கப்படுகிறது.

மேலும் விபரங்களுக்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பட்டியலை ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளவும்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...