Pages

Monday, March 5, 2018

விமானத்தை காணவில்லை! ஆட்டையப் போட்ட குடும்பம்!!

அதிரை நியூஸ்: மார்ச் 05
சர்வதேச அரசியலை வாசிப்பவர்கள் மிக மிக சமீபத்தில் படித்திருப்பீர்கள், தென் ஆப்பிரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த ஜேக்கப் ஜூமா இந்திய வம்சாவளியை சேர்ந்த குப்தா குடும்பத்தினர் செய்த ஊழலால் தனது பதவியை விட்டே விலக நேர்ந்தது.

இந்தியா பேங்குகளில் பல்லாயிரம் கோடி சுருட்டிய பலர் விமானம் ஏறி தப்பித்து ஓடிய செய்திகள் இன்னும் அடங்கவில்லை ஆனால் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குப்தா குடும்பத்தினர் கனடா நாட்டிலும் 41 மில்லியன் டாலர் பெறுமான ஒரு சொகுசு விமானத்தை ஆட்டையப் போட்டுவிட்டு அதை தந்திரமாக மறைத்தும் வைத்துள்ள செய்தி வெளிவந்துள்ளது.

கனடா நாட்டின் சிறப்புமிகு தயாரிப்பு Bombardier Global 6000 business jet  ZS-OAK  வகை விமானங்கள். இந்த விமானங்களை பல வர்த்தகர்கள், பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோர் தங்களின் தனிப்பட்ட தேவைகளுக்கான விமானங்களாக உபயோகித்து வருகின்றனர். இந்த விமானங்களின் ஒன்றை தான் குப்தா குடும்பத்தினர் கனடா நாட்டின் Export Development Canada, or EDC, Canada's state-owned export-import bank என்ற அரசு வங்கியில் கடன் பெற்று வாங்கினர், வாங்கியதோடு சரி கடனை கட்டாமல் எஸ்கேப் ஆகியுள்ளனர்.

மேலும் இந்த விமானத்தை கடன் கொடுத்த வங்கியாலோ தென் ஆப்பிரிக்க அதிகாரிகளாலோ கண்டுபிடிக்க இயலவில்லை இத்தனைக்கும் இந்த விமானம் இந்தியா, ரஷ்யா, துபை என பறந்து கொண்டுள்ளதாம். இதன் டிரேக்கிங் விபரங்களை பிறருக்கு தரக்கூடாது என தடை செய்து வேறு வைத்துள்ளனர் குப்தா குடும்பத்தினர்.

குப்தா குடும்பம் எனப்படும் 3 அண்ணன் தம்பிகளில் ஒருவரான அஜய் குப்தா என்பவருக்கு எதிரான வழக்கு ஒன்று நாளை தென் ஆப்பிரிக்காவில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில் தேடிக் கொண்டே உள்ளனர்.

பாவம் வங்கிகளா? மக்களா?

Source: The Washington Post / Msn
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...