Pages

Tuesday, March 6, 2018

சீமான் பங்கேற்கும் அதிராம்பட்டினம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு !

அதிராம்பட்டினம், மார்ச் 06
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்கும் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம், அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் வரும் (மார்ச் 9) வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.

இதையொட்டி, கட்சி செயல்வீரர்களின் ஆலோசனைக் கூட்டம் அதிராம்பட்டினம் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் கீதா கருணாநிதி தலைமை வகித்தார். மாவட்ட இளைஞர் பாசறை இணைச் செயலாளர் ஏ.ஜே ஜியாவூதீன், அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் மீ. செகபர் சாதிக், செயலர் சே. சைபுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில், எதிர்வரும் மார்ச் 9 ந் தேதி அதிராம்பட்டினம் வருகை தரும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் புதிய அலுவலகம் திறப்பு, கொடியேற்றம் நிகழ்ச்சிகள் நடத்துவது, பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அனைவருக்கும் அழைப்பு விடுப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில், நாம் தமிழர் கட்சியினர் பலர் கலந்துகொண்டனர். 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...