Pages

Tuesday, March 13, 2018

சவுதியில் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு பள்ளிக்கூடங்களின் கல்வி கட்டணம் உயர்வு!

அதிரை நியூஸ்: மார்ச் 13
சவுதியில் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு பள்ளிக்கூடங்களின் கல்வி கட்டணங்கள் உயர்ந்தன

சவுதியில் செயல்படும் அனைத்து வெளிநாட்டு பள்ளிக்கூடங்களின் நேரடி ஸ்பான்ஸரின் கீழ் பணியாற்றாத ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் (அதாவது கணவர் அல்லது தந்தையின் ஸ்பான்ஸரின் கீழ் உள்ளவர்கள்) ஒவ்வொருக்காகவும் சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடங்கள் வருடத்திற்கு தலா 9,500 ரியால்களை 'அஜீர் லெவி' (Ajeer Levy) என்கிற வரியை கட்ட வேண்டும் என 2015 ஆம் ஆண்டு உத்தரவிடப்பட்டு இருந்தது எதிர்வரும் 2018 ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வருகிறது. அதேவேலை சவுதி அரசுப் பள்ளிகளில் இத்தகையோர் பணிபுரிந்தால் 1,500 மட்டுமே அஜீர் லெவி வசூலிக்கப்படும்.

இந்த அஜீர் லெவியின் காரணமாக தம்மாமில் செயல்படும் தி இன்டெர்நேஷனல் இன்டியன் ஸ்கூல் ஆப் தம்மாம் (The International Indian School of Dammam) தனது புதிய மாணவர் அட்மிஷன் கட்டணத்தை 1,000 ரியாலிலிருந்து 1,500 ஆக உயர்த்தியுள்ளதுடன் அனைத்து மாணவர்களின் பள்ளிக்கட்டணத்தின் மீது தலா 15 ரியால்களை அதிகப்படுத்தியுள்ளது.

அதேபோல் ஒரே பெற்றோரின் 2வது குழந்தையும் அதேபள்ளியில் பயின்றால் அவர்களுக்கு என வழங்கப்பட்ட சிறப்புத் தள்ளுபடியையும் ரத்து செய்துள்ளது. ரியாத்தில் செயல்படும் இன்டெர்நேஷனல் இன்டியன் ஸ்கூல் ஆப் ரியாத்தும் இதேநிலையை எடுத்துள்ள நிலையில் ஜித்தாவில் செயல்படும் பள்ளியும் இதேபோன்றதொரு அறிவிப்பை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியப் பள்ளியைப் போன்றே பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், பங்களாதேஷ் போன்ற நாடுகளைச் சேர்ந்த பள்ளிகளும் அறிவிக்கவுள்ளன. தி இன்டெர்நேஷனல் இன்டியன் ஸ்கூலில் பணியாற்றும் சுமார் 1,000 ஆசிரியர் மற்றும் ஊழியர்களில் சுமார் 700 பேர் கணவர் அல்லது பெற்றோர்களின் ஸ்பான்சர் விசாக்களின் பணிபுரியும் மனைவி அல்லது மகள்களே.

அஜீர் லெவியான 9,500 ரியாலில் 50 %ஆசிரியர், ஊழியர்களே செலுத்த வேண்டும் எஞ்சிய 50 % பள்ளிக்கூடங்கள் செலுத்தும் என்ற தி இன்டெர்நேஷனல் இன்டியன் ஸ்கூல் நிர்வாகத்தின் முடிவுகளுக்கு ஆசிரியர் தரப்பில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஏனென்றால் அவர்களின் சம்பளம் 1,800 முதல் 4,000 ரியால்களுக்குள் மட்டுமே, வேறு எந்த சலுகைகளும் அறவே கிடையாது.

இதற்கு முன் ஆசிரியர்கள் பணியாற்றும் பள்ளிகளில் படிக்கும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு கட்டணமில்லா இலவச கல்வியுடன் போக்குவரத்து கட்டணத்திலும் சிறிது சலுகை வழங்கப்பட்டு வந்ததும் ரத்து செய்யப்பட்டுவிட்டதுடன் அனைத்து மாணவர்களின் போக்குவரத்து கட்டணத்திலும் தலா 10 ரியால்கள் ஏற்றப்பட்டுள்ளன.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...