Pages

Saturday, March 10, 2018

ஷார்ஜாவில் நடு ரோட்டில் காரை நிறுத்திய ஓட்டுனர் மீது மற்றொரு கார் மோதி மரணம்!

அதிரை நியூஸ்: மார்ச் 10
அமீரகம், ஷார்ஜாவில் நட்டநடு ரோட்டில் காரை நிறுத்திய ஓட்டுனர் மீது மற்றொரு கார் மோதி மரணம்

அமீரகம், ஷார்ஜாவின் ஷேக் முஹமது பின் ஜாயித் ரோட்டில் தஸ்ஜீல் வில்லேஜ் அருகே சென்று கொண்டிருந்த ஒரு வாகனத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து அதனை ஓட்டி வந்தவர் நட்டநடு ரோட்டிலேயே காரை நிறுத்தினார்.

கோளாறால் நின்று போன அந்தக்காரிலிருந்து அவர் இறங்கவும் முயற்சிக்கவில்லை என்பதுடன் காரையும் ரோட்டின் ஓரமாக கொண்டு சென்று நிறுத்த எத்தகைய முயற்சியை செய்யவில்லை. இந்நிலையில் அந்த ரோட்டில் வேகமாக வந்த மற்றொரு கார் நட்டநடு ரோட்டில் நின்ற கார் மீது மோதியதில் காருக்குள் இருந்த டிரைவர் மரணத்தை தழுவினார்.

வாகனங்களில் பிரச்சனை ஏதும் ஏற்பட்டால் உடனடியாக வாகனங்களை சாலை ஓரங்களுக்கு கொண்டு செல்லும்படியும் அல்லது மிக அவசர காலங்களில் பிற வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் சைகை அடையாளங்களை (Yield Sign) மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளனர் ஷார்ஜா போலீஸார்.

Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான்

1 comment:

  1. எந்த காரின் ஓட்டுநர் உயிரிழந்தார் என்ற தெளிவில்லையே! பின்னால் வந்து மோதிய காரின் டிரைவரா அல்லது நின்று கொண்டிருந்த காரின் டிரைவரா??

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...