Pages

Saturday, March 3, 2018

கென்யாவில் தவறுதலாக இன்னொருவருக்கு மண்டையை திறந்து ஆபரேசன் செய்த மருத்துவர்கள்!

அதிரை நியூஸ்: மார்ச் 03
ஒருவருக்கு பதில் இன்னொருவருக்கு ஆபரேசன் செய்வதாக சினிமாக்களில் காமெடிக் காட்சிகளாக வருவதை பார்த்துள்ளோம் ஆனால் கென்யாவில் அதை உண்மையாகவே நடத்திக் காட்டியுள்ளனர் கென்யாவின் பழம்பெறும் வரலாறுக்கு சொந்தமான மருத்துவமனையின் மருத்துவர்கள்.

தலைநகர் நைரோபியில் உள்ள கென்யட்டா தேசிய மருத்துவமனை என்பது கென்யா நாட்டின் மிகப்பழமையானதும், பிரம்மாண்டமானதும் என்பதுடன் மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனையாகவும் விளங்கி வருகிறது.  இங்கு ஒருவர் மூளையில் உறைந்த இரத்தத்தை அகற்றுவதற்காகவும் மற்றவர் விபத்தில் ஏற்பட்ட தலை வீக்கத்திற்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காகவும் ஒரே வார்டில் சேர்க்கப்படுகின்றனர்.

ஆபரேசன் மூளையில் ரத்தம் உறைந்தவருக்கு என துவங்குகிறது. ஒரு நரம்பியல் மருத்துவர், ஒரு மயக்க மருந்து நிபுணர், 2 நர்சுகள் என தலையை திறந்து ஆபரேசன் நடத்திக் கொண்டிருக்கையில் சுமார் 2 மணிநேரம் கழித்துத்தான் அவர்களுக்கு தெரிகிறது தவறான ஒருவருக்கு ஆபரேசன் செய்யப்பட்டு வரும் விஷயம்.

தற்போது அந்த நால்வர் கொண்ட மருத்துவக் குழுவினருடன் அந்த மருத்துவமனையின் இயக்குனரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மூளையில் ரத்தக்கட்டு ஏற்பட்டவருக்கு ஆபரேசன் இல்லாமலேயே நிலைமை சரியாகிவிட்டது என அறிவித்துள்ளனர். தவறாக மண்டை பிளக்கப்பட்டவரும் ஒகே தாங்க... என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை விட்டுக்கொண்டுள்ளது.

யாரா இருந்தாலும் மண்ட பத்திரம்..

Sources: Sky News / Emirates 247 / Msn
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...