Pages

Wednesday, March 7, 2018

எச்.ராஜாவை கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்!

பேராவூரணி மார்ச்.07
திரிபுராவில் லெனின் சிலையை உடைத்தது போல தமிழகத்தில் பெரியார் சிலையை உடைத்து எறியப்படும் என வன்முறையை தூண்டும் விதமாக எழுதிய பாஜக தேசியச்செயலர் ஹெச்.ராஜாவை கண்டித்தும், அவரை கைது செய்யவும் வலியுறுத்தி, பேராவூரணி பெரியார் சிலை அருகில் இடதுசாரி அணி சார்பில் செவ்வாய்க்கிழமை மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் விடுதலைக்கழக மாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சி.பழனிவேலு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ராஜமாணிக்கம், திமுக தலைமைக்கழக பேச்சாளர் அ.அப்துல் மஜீத், தமிழக மக்கள் புரட்சிக்கழக கொள்கை பரப்பு செயலாளர் ஆறு.நீலகண்டன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் வி.கருப்பையன், சேதுபாவாசத்திரம் ஒன்றியச்செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி, ஒன்றியக்குழு பெரியண்ணன், பேராவூரணி நகரச்செயலாளர் வே.ரெங்கசாமி, சிபிஐ நகரச்செயலாளர் எம்.சித்திரவேலு, பாரதி வை.நடராஜன், விடுதலை சிறுத்தைகள் நகரச்செயலாளர் எஸ்.எஸ்.மைதீன், மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், திமுக ஏலக்கடை கோவி.நீலகண்டன், திராவிடர் விடுதலைக்கழகம் தா.கலைச்செல்வன், த.ம.பு.க பைங்கால் மதியழகன், பாலா, மற்றும் ஆயர்.த.ஜேம்ஸ், தமுஎகச கிளைச் செயலாளர் எஸ்.ஜகுபர்அலி  உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

அனைத்து கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்: 
பெரியார் சிலையை அகற்றுவோம் என வன்முறையைத் தூண்டும் விதமாக பேசியும், எழுதியும் வரும் பாஜக தேசியச்செயலாளர் ஹெச்.ராஜாவைக் கண்டித்தும், திருப்பத்தூரில் பெரியார் சிலை உடைக்கப்பட்டதைக் கண்டித்தும் அனைத்து கட்சி சார்பில் புதன்கிழமை அன்று பெரியார் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளர் வை.சிதம்பரம் தலைமையில் நடைபெற்றது.

திமுக சார்பில் முன்னாள் பேரூராட்சி தலைவர் என்.அசோக்குமார், முன்னாள் மாவட்ட துணைச்செயலாளர் என்.செல்வராஜ், நகரச்செயலாளர் கோ.நீலகண்டன், முன்னாள் ஒன்றியச்செயலாளர் சுப.சேகர், சேதுபாவாசத்திரம் ஒன்றியச்செயலாளர் மு.கி.முத்துமாணிக்கம், மதிமுக சார்பில் வ.பாலசுப்பிரமணியன், க.குமார், சிபிஎம் சார்பில் ஆர்.எஸ்.வேலுச்சாமி, சிபிஐ சார்பில் பா.பாலசுந்தரம், கோ.பன்னீர்செல்வம், ப.காசிநாதன், விடுதலை சிறுத்தைகள் சார்பில்  மோட்ச குணவழகன், டிடிவி அணி சார்பில் ஒன்றியச்செயலாளர்கள் அலிவலம் ஆசைத்தம்பி, பார்த்திபன், நகரச்செயலாளர் பாண்டியராஜன், பொறியாளர் குருவிக்கரம்பை ஜெயச்சந்திரன், தி.க.சார்பில் நீலகண்டன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...