Pages

Monday, March 5, 2018

துபையில் நோல் கார்டு மூலம் கட்டணங்கள் செலுத்தும் வசதி விரிவாக்கம்!

அதிரை நியூஸ்: மார்ச் 05
துபையில் நோல் கார்டுகள் (Nol cards) எனப்படும் அட்டைகள் ஆரம்பமாக பஸ், மெட்ரோ மற்றும் படகு போக்குவரத்துகளுக்கு டிக்கெட் கட்டணம் செலுத்தும் அட்டையாக தான் அறிமுகப்படுத்தப்பட்டது அறிந்ததே. பின்பு துபை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இதன் பயன்பாடுகளை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டதன் அடிப்படையில் பார்க்கிங் கட்டணம், பூங்காக்கள் நுழைவு கட்டணம், யூனியன் மியூசியம் நுழைவு கட்டணம் என விரிவுப்படுத்தப்பட்டன.

மேலும் ஈனாக்எ (Enoc) எப்கோ (Eppco) பங்க்குகளில் பெட்ரோல் நிரப்பவும், துபையின் பல சில்லறை விற்பனைக் கடைகளில் பொருட்கள் வாங்கவும் அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் துபை போக்குவரத்துத் துறையின் சேவைக் கட்டணங்கள் மற்றும் அபராதங்களை கஸ்டமர் ஹேப்பினஸ் சென்டர்கள் (Customer Happiness Center) எனப்படும் வாடிக்கையாளர் சேவை மையங்களில் செலுத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

துபை போக்குவரத்து துறையின் வாடிக்கையாளர் மையங்கள் செயல்படும் உம்மு ரமூல் (Umm Ramool), அல் கிபாப் (Al Kifaf), அல் பர்ஷா (Al Barsha), அல் தவார் (Al Tawar) மற்றும் அல் மனாராவில் (Al Manara) செயல்படும் 5 கஸ்டமர் ஹேப்பினஸ் சென்டர்களில் துபை போக்குவரத்து துறை (RTA) சம்பந்தப்பட்ட அனைத்து கட்டணங்கள் மற்றும் அனைத்து அபராதங்கள் என அனைத்தையும் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன் நோல் கார்டுகளின் பயன்பாடு மேலும் பல சேவைகளுக்கும் விரிவுபடுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...