Pages

Wednesday, March 7, 2018

சவுதியில் திருடனை பிடிக்க முயன்றபோது உயிரிழந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்!

அதிரை நியூஸ்: மார்ச் 07
சவுதி அரேபியாவில் பணிபுரிந்தவர்கள், பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள், பெட்ரோல் நிரப்பிய பின் பணம் தராமல் தப்பித்துச் செல்லும் சில வாலிபர்களின் செயலால் பெட்ரோல் பங்குகளில் பணியாற்றுவோர் பொருளாதார இழப்பிற்கும், மன உளச்சலுக்கும் உள்ளாகும் நிகழ்வுகளை. ஆனால், இம்முறை ஒரு உயிரையே பறித்துள்ளது பொறுப்பற்ற சில சவுதி வாலிபர்களின் செயல்.

கிழக்கு மாகாணத்தின் அப்கைக் பிரதேசத்தில் (Abqaiq governorate) ஒரு பெட்ரோல் பங்கில் பணியாளராக இருந்தவர் 26 வயதுடைய பாகிஸ்தானிய இளைஞர் முஹம்மது ஷம்ரேஷ். இவர் பணியாற்றிக் கொண்டிருந்த போது பெட்ரோல் நிரப்பிய சில சவுதி வாலிபர்கள் 65 ரியாலை தராமல் தப்பித்து சென்றதால் அவர்களை பிடிக்கும் நோக்குடன் அந்தக் காரின் பின்புறம் தாவிக்குதித்து ஏறியதில் தவறி விழுந்து பலத்த காயமடைந்து மயக்கமானார்.

தம்மாம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட போதும் பலனில்லாதால் அவர் மூளைச்சாவு அடைந்தவராக அறிவிக்கப்பட்டார். குடும்பத்தினரின் அனுமதியின் பேரில் மூளைச்சாவு அடைந்தவரின் சில உடல் உறுப்புக்கள் அகற்றப்பட்டு உறுப்பு மாற்று சிகிச்சை தேவையுடைய சவுதி நாட்டவர்களுக்கு பொருத்திக் கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தை தொடர்ந்து 17 வயது இளைஞர் ஒருவரும் அவரது நண்பர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் பக்கத்து அரபுநாடு ஒன்றைச் சேர்ந்தவர் எனத் தெரிய வந்துள்ளதுடன் 17 வயது இளைஞர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் தனியே அடைக்கப்பட்டுள்ளார்.

Sources: Saudi Gazette / Msn
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...