Pages

Monday, March 5, 2018

அதிராம்பட்டினத்தில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை / புதுப்பித்தல் படிவம் வழங்கல் (படங்கள்)

அதிராம்பட்டினம், மார்ச் 05
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் அதிமுக நிர்வாகிகளிடம், உறுப்பினர்கள் சேர்க்கை - புதுப்பித்தல் படிவங்கள் வழங்கும் நிகழ்ச்சி அதிரை லாவண்யா மஹாலில் திங்கட்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கட்சியின் அதிரை பேரூர் செயலாளர் ஏ.பிச்சை தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகர் வழிகாட்டுதல் பேரில், அதிமுக பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் பி.சுப்ரமணியன், எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் மலைஅய்யன் ஆகியோர் கலந்துகொண்டு, அதிராம்பட்டினம் பேரூர் வார்டு செயலாளர்கள், நிர்வாகிகளிடம் கட்சிக்கான உறுப்பினர் சேர்க்கை மற்றும் புதுப்பித்தல் படிவங்களை வழங்கினார். அப்போது அவர், அதிமுக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் விளக்கி, கட்சிக்கு புதிய உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியில், அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் துணைச் செயலாளர் முகமது தமீம், தஞ்சை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் சேதுராமன், வார்டு முன்னாள் கவுன்சிலர்கள் உதயகுமார், சிவக்குமார், வார்டு பொறுப்பாளர்கள் ஹாஜா பகுரூதீன், முகமது முகைதீன், யஹ்யாகான், லியாகத் அலி, அகமது ஹாஜா, துரை.பாஞ்சாலன், சங்கர், அசோக், துரை. முருகானந்தம், அபுதாகிர் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...