Pages

Sunday, March 4, 2018

சவுதி வாழ் வெளிநாட்டவர்கள் உம்ராவுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என வெளியான செய்திக்கு மறுப்பு!

அதிரை நியூஸ்: மார்ச் 04
சவுதியில் வாழும் வெளிநாட்டு முஸ்லீம்கள் உம்ராவுக்குச் செல்வதாக இருந்தால் அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் என்றும் இதை நடைமுறைப்படுத்துவதற்குரிய வழிகளை ஆராய குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்தி ஒன்று பரப்பப்பட்டு வந்தது.

இந்தக் கட்டணங்களை செலுத்துவதற்காக ஜித்தா சர்வதேச விமான நிலையம், ஜித்தா ஹரமைன் ரயில் நிலையம், தாயிப் ரீஜினல் விமான நிலையம், மதீனா விமான நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் இதற்கான கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அச்செய்தி மேலும் கூறியதை முற்றாக மறுத்துள்ளது ஹஜ் மற்றும் உம்ராவுக்கான அமைச்சகம்.

சமூக வலைத்தளங்களில் பொறுப்பற்ற முறையில் பரப்பப்படும் பொய் செய்தி என்றும் கட்டணம் விதிக்க ஆராயும் குழு எதுவும் நியமிக்கப்படவில்லை என்றும் அப்படி ஒரு திட்டமேயில்லை என்றும் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார் அமைச்சக உயர் அதிகாரி அப்துல் அஜீஸ் வஸ்ஸான் என்பவர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...