Pages

Wednesday, March 7, 2018

EP மாடல் நர்சரி & பிரைமரி பள்ளி 17 வது ஆண்டு விழா நிகழ்ச்சி (படங்கள்)

அதிராம்பட்டினம், மார்ச் 07
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் EP மாடல் நர்சரி & பிரைமரி பள்ளி
17 வது ஆண்டு விழா நிகழ்ச்சி லாவண்யா திருமண மகாலில் புதன்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு பள்ளித் தாளாளர் ஜே. அமீன் நவாஸ்கான் தலைமை வகித்தார்.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் எம்.ஏ. முகமது அப்துல் காதர்,
அர்ரவ்ழா இஸ்லாமிக் மகளிர் கல்லூரி நிறுவனர் எம்.ஜமீல் முகமது சாலிகு, வழக்குரைஞர் ஏ. முனாப், பல் மருத்துவர் எம்.எச் பஜலூர் ரஹ்மான் ஆகியோர் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கி பாராட்டுத் தெரிவித்தனர்.

விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை அறிவுத்திறன் நிகழ்ச்சிகள் நடந்தது. இதில், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தினர்.

முன்னதாக, பள்ளி முதல்வர் டாக்டர் எம்.ஏ ராபியா நவாஸ் வரவேற்றுப் பேசினார். விழா முடிவில் நன்றி கூறினார். பள்ளி ஆசிரியை றிசானா அபூபக்கர் பள்ளி ஆண்டறிக்கை வாசித்தார். இவ்விழாவில், ஊர் பிரமுகர்கள், பள்ளி ஆசிரியைகள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
 
 


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...