Pages

Sunday, March 4, 2018

அல் அய்ன் Green Mubazzarah ல் விரைவில் சொகுசு சுற்றுலா ரயில் !

அதிரை நியூஸ்: மார்ச் 04
அமீரகத்தின் மிக முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்று அல் அய்ன் எனும் பாலைவனச் சோலை (Oasis) நகரில் அமைந்துள்ள கிரீன் முபஸ்ஸரா (Green Mubazzarah) எனும் செயற்கை புல்வெளித் தோட்டம், இது புகழ்பெற்ற ஜபல் ஹபீத் (Jabal Hafeet) மலையடிவாரத்தில் அமைந்துள்ளதுடன் இங்கு பொங்கிவழியும் இயற்கை சுடுநீர் ஊற்றும் (Hot Water Spring) உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த கிரீன் முபஸ்ஸரா தோட்டத்தை சுற்றுப்பார்க்கவும், அதன் வரலாறு மற்றும் அமைப்பின் தொன்மையை அறிந்து கொள்ள ஏதுவாக சிறிய ரக சொகுசு சுற்றுலா ரயில் ஒன்றை இயக்கத் தேவையான பணிகள் ஆரம்பமாகியுள்ளன. Leisure Train Tourism திட்டம் இவ்வருட இறுதிக்குள் நிறைவுறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பணிகள் நிறைவுற்று இந்த ரயில் ஓடத்துவங்கும் போது நாளொன்றுக்கு 10 முறை இயக்கப்படும், பெரியவர்களுக்கு 25 திர்ஹமும், சிறார்களுக்கு 15 திர்ஹமும் கட்டணமாக வசூலிக்கப்படும் அதேவேளையில் 3 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...