Pages

Sunday, March 4, 2018

அதிரையில் TNTJ நடத்திய கேள்வி - பதில் நிகழ்ச்சி (படங்கள்)

அதிராம்பட்டினம், மார்ச் 04
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அதிராம்பட்டினம் கிளை-1 சார்பில் 'இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்' எனும் தலைப்பில் இஸ்லாமிய மார்க்கம் தொடர்பான கேள்வி பதில் நிகழ்ச்சி அதிராம்பட்டினம் ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் உள்ள தவ்ஹீத் பள்ளிவாசலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அதிராம்பட்டினம் கிளைத் தலைவர் நவாப்ஷா  தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் ஹைதர் அலி, கிளைப் பொருளாளர் அல்லா பிச்சை, துணைத் தலைவர் அ.மு அப்துல் வஹாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அவ்வமைப்பின் மாநில தணிக்கைக் குழு உறுப்பினர் முகமது ஒலி Misc கலந்துகொண்டு கூட்டத்தில் பங்கேற்றோர் எழுப்பிய இஸ்லாம் தொடர்பான கேள்விகளுக்கு நேரடியாக பதிலளித்து பேசினார். இந்நிகழ்ச்சியில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...