Pages

Friday, April 6, 2018

பஹ்ரைனில் 116 ஆண்டுகளுக்கு பிறகு மார்ச் 2018 ல் அதிக வெப்பம் பதிவு!

அதிரை நியூஸ்: ஏப்.06
பஹ்ரைனில் 1902 ஆண்டுக்குப் பின் மிகவும் சூடான மார்ச் மாதமாக 2018 ஆண்டு மார்ச் மாதம் தகித்துள்ளது.

பஹ்ரைன் நாடு தன் வரலாற்றிலேயே மிகச்சாதனை அளவாக சுமார் 80 பில்லியன் கச்சா எண்ணெய் வளத்தை கண்டுபிடித்து சாதனை செய்துள்ள நிலையில் இன்னொரு சாதனையும் சத்தமில்லாமல் நிகழ்ந்துள்ளது.

வளைகுடா பிராந்தியங்களில் தற்போது தான் கால நிலைகளில் மாற்றம் சற்றே படிப்படியாக மாறி கொளுத்தும் சூட்டிற்கு முழுவீச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில், 1902 ஆம் ஆண்டிற்குப் பின் இந்த வருட மார்ச் மாதம் மிகவும் சூடான மார்ச் மாதமாக தகித்துள்ளதாக பஹ்ரைன் வானிலை மையம் தனது மாதாந்திர வானிலை பதிவு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

1968 ஆம் ஆண்டு முதல் துவங்கும் இக்கணக்கெடுப்பில் அதிகநேரம் சூரியஒளி பிரகாசித்துள்ளதும் தெரிய வந்துள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மொத்தம் 285.2 மணிநேரம் ஒளிவீசியுள்ள நிலையில் இந்த ஆண்டு மார்ச் மாதம் 324.6 மணிநேரம் ஒளிவீசி அந்த சாதனையும் தகர்ந்துள்ளது.

அதேபோல் 1969 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சராசரியாக 24.2 டிகிரி செல்ஷியஸ் தட்பவெப்பம் நிலவிய நிலையில் எல்லா மார்ச் மாதங்களிலும் சராசரியாக 24.6 டிகிரி செல்ஷியஸ் நிலவும், அதாவது சராசரி ஆண்டு தட்வவெப்ப உயர்வில் 3.6 டிகிரி செல்ஷியஸ் உயரும், ஆனால் இந்த ஆண்டு 29.6 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதற்கு முந்தைய சாதனையாக 1969 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் 28.8 டிகிரி செல்ஷியஸாக இருந்துள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...