Pages

Thursday, April 12, 2018

அதிராம்பட்டினத்தில் தமுமுக~மமகவினர் 12 இடங்களில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்!

அதிராம்பட்டினம், ஏப்.12
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வலியுறுத்தியும், தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்தும், தமுமுக, மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கருப்பு கொடி ஏற்றும் போராட்டம் அதிராம்பட்டினத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

போராட்டத்திற்கு, தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் அதிரை அகமது ஹாஜா தலைமை வகித்தார். இதில், அதிரை கடைத்தெரு தமுமுக/மமக அலுவலகம், அதிரை பேருந்து நிலையம், கல்லூரி முக்கம், பிலால் நகர் பேருந்து நிறுத்தம், தக்வா பள்ளிவாசல் முக்கம், செக்கடி மேடு, சிஎம்பி லேன், சேர்மன் வாடி, வண்டிப்பேட்டை, ஷிஃபா மருத்துவமனை அருகில் உள்ளிட்ட 12 இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடைபெற்றது. இதில், தமுமுக மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ஓ செய்யது முகமது புஹாரி, மமக அதிரை பேரூர் செயலாளர் எஸ்.ஏ இத்ரீஸ் அகமது, மாவட்ட துணைச்செயலர் எஸ்.எஸ் சேக்காதியார், ஊடகப்பிரிவு பொறுப்பாளர் எம்.ஆர் முகமது ஹாலித் உள்ளிட்ட அதிரை பேரூர் தமுமுக, மமக நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டு கருப்பு சட்டை அணிந்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...