Pages

Thursday, April 26, 2018

வீட்டில் கோபித்துக் கொண்டு தனியே விமானத்தில் ஏறி பறந்த 12 வயது சிறுவன்!

அதிரை நியூஸ்: ஏப்.26
பெற்றோர்கள் எதிர்பாரா சூழ்நிலையால் ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தோனேஷியாவிற்கு செல்ல வேண்டிய சுற்றுலா பயணத்தை ரத்து செய்தனர் இதனால் கடுப்பான அவர்களது 12 வயது மகன் இந்த 'அநியாயத்தை' பொறுத்துக் கொண்டு இருக்க முடியுமா?

எடுத்தான் பெற்றோர்களுடைய கிரடிட் கார்டை, சிட்னியில் இருந்து பாலி தீவிற்கு ஏர் டிக்கெட், ஹோட்டல் புக்கிங் போன்றவற்றை ஆன்லைன் மூலம் அட்சார சுத்தமாக செய்தான். விமான நிலையத்தில் செல்ஃப் சர்வீஸ் மூலம் செக்-இன் செய்தான். வழி மறித்த விமான நிலைய ஊழியர்களிடம் தனது பாஸ்போர்ட்டையும் பள்ளிக்கூட ஐடியை தைரியமாக காண்பித்தான் அதற்குப் பிறகு அந்த ஊழியர் மறுவார்த்தை பேசவில்லை.

சிட்னியிலிருந்து பெர்த் விமான நிலையத்திற்கு வந்திறங்கினான் பின் அங்கிருந்து இந்தோனேஷியாவின் பாலி தீவிற்கு செல்லும் விமானத்திலும் ஏறினான். பாலியில் தான் சென்று தங்க வேண்டிய ஹோட்டலிலும் சரியாக சென்று தங்கினான். ஹோட்டல் ஊழியர்கள் சந்தேகப்பட்டு கேட்ட போது தனது அக்காவும் தன்னோடு சேர்ந்து தங்க வந்து கொண்டிருப்பதாக அள்ளிவிட ஹோட்டல் ஊழியரும் கப்சிப்.

கடைசியாக எப்படியோ குட்டு உடைய அவனது அம்மா தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டார் ஆனால் அந்தப் பையன் நான் சாகசம் செய்ய நினைத்தேன், நினைத்தது போலவே சிறப்பாக அனுபவித்தேன் என பிபிசியிடம் பேட்டியும் கொடுத்துள்ளான்.

ஒவ்வொரு விமான நிறுவனமும் மைனர் குழந்தைகள் தனியாக பயணம் செய்யும் விஷயத்தில் வேறு வேறு அளவுகோல்களை கொண்டுள்ளன என்பதால் இத்தவறு மிகச்சாதாரணமாக நடந்துள்ளதென கூறும் ஆஸ்திரேலியா பெடரல் போலீஸ் இனி இந்த மாதிரி தப்பு நடக்கக்கூடாது என கடுகடுத்துக் கொண்டுள்ளது.

இந்த சிறுவன் செய்தது மகா பெரிய தப்பு என்பதில் மாற்றுக் கருத்தில்லை ஆனால் எதையும் சாதிக்க வேண்டும் என்ற துணிச்சல் இவனை எதிர்காலத்தில் வேறு அளவில் கொண்டு செல்லும் என யூகிக்கத் தோன்றுகிறது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...