Pages

Wednesday, April 11, 2018

அமீரகத்தில் எதிர்வரும் ஏப்.14 ல் புனித இஸ்ரா வ அல் மிஹ்ராஜ் அனுசரிப்பு!

அதிரை நியூஸ்: ஏப்.11
இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் புனித விண்வெளிப் பயணம் மேற்கொண்ட நாளான இஸ்ரா வ அல் மிஹ்ராஜ் தினம் (Isra'a Wal Mi'raj) பிறைக்கணக்கின் அடிப்படையில் எதிர்வரும் ஏப்ரல் 14, சனிக்கிழமையன்று வருகிறது. இந்த நாளில் அரபுநாடுகளில் பொதுவிடுமுறை அறிவிக்கப்படுவது வழமை.

அரபுநாடுகளில் பொதுவாக அரசு உட்பட பல தனியார் நிறுவனங்களுக்கும் வெள்ளி, சனி வார விடுமுறை தினங்களாகும். இன்னும் பல தனியார் நிறுவனங்களில் வெள்ளிக்கிழமை மட்டுமே வார விடுமுறை உண்டு, அவ்வாறு வெள்ளிக்கிழமையை மட்டும் வார விடுமுறையாக கொண்டவர்களுக்கு மட்டும் எதிர்வரும் சனிக்கிழமை பொதுவிடுமுறையாக அமைய வாய்ப்புண்டு.

வெள்ளி, சனி வார விடுமுறையாளர்கள் மற்றும் அரசுத்துறை ஊழியர்களுக்கு என கூடுதல் பொது விடுமுறை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. பலரும் இது குறித்த அமைச்சகத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை எதிர்பார்த்த நிலையிலுள்ளனர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

தற்போதைய செய்தி:
அமீரக பெடரல் மனித வள ஆணையம் மற்றும் மனிதவள அமைச்சகமும் அறிவித்துள்ளபடி (The announcement was made today by the Federal Authority for Government Human Resources and the Ministry of Human Resources and Emiratisation), எதிர்வரும் ஏப்ரல் 14 சனிக்கிழமை அனைவருக்குமான பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அரசுத்துறை மற்றும் சில தனியார் நிறுவனங்களுக்கு கூடுதல் விடுமுறை இல்லை என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த பொதுவிடுமுறை அறிவிப்பின் மூலம் வழமையாக சனிக்கிழமைகளில் வாராந்திர விடுமுறை இல்லாதவர்கள் மட்டுமே பயன்பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Source: Khaleej Times

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...