Pages

Monday, April 9, 2018

2030 ஆண்டுக்குள் 64% செல்வம் உலகின் 1% பெரும் பணக்காரர்களின் பிடியில் சிக்கும்!

அதிரை நியூஸ்: ஏப்.09
2030 ஆண்டுக்குள் 64% செல்வம் உலகின் 1% பெரும் பணக்காரர்களின் பிடியில் சிக்கும் என ஆய்வில் தகவல்.

சராசரி வருமானம் ஈட்டுபவர்களை விட பணக்காரர்கள் ஈட்டும் வருமானத்தின் அளவு விரைவாக கூடிக்கொண்டே செல்வதால் ஏழை – பணக்காரர்களுக்கு இடையேயான இடைவெளி மேலும் மேலும் அதிகரிக்கவுள்ளது.

சமீபத்திய ஆய்வின்படி, இன்னும் 12 ஆண்டுகளுக்குள் உலகிலுள்ள 1% பெரும் பணக்காரர்களில் கைகளில் மட்டுமே உலகின் 3ல் 2 பங்கையும் தாண்டி செல்வம் குவியுமாம். கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் பெரும் பணக்காரர்கள் வருடத்திற்கு 6% என கூடுதல் பொருளாதார வளர்ச்சியை பெற்று வருகின்றன காரணத்தால் இந்த 1% பெரும் பணக்காரர்களின் வசம் உலகின் பாதி செல்வம் ஏற்கனவே சென்றுவிட்டதும் குறிப்பிடத்தக்கது.

பெரும் பணக்காரர்களின் பொருளாதார வளர்ச்சி இதே நிலையில் தொடர்ந்தால் எதிர்வரும் 2030 ஆண்டிற்குள் உலகின் 64% பொருளாதாரங்கள் 1% பெரும் பணக்காரர்களின் கைகளுக்குள் முடங்கிவிடுமாம்.

அதேவேளை எஞ்சிய 99 உலக மக்கள் அல்லது 7 பில்லியனுக்கும் அதிகமான உலக மக்களின் பொருளாதார வளர்ச்சி அவர்களின் பொருளாதார இருப்பிற்கு ஏற்ப சராசரியாக 3% மட்டுமே உயர்வதால் 195 டிரில்லியன் அளவிலான சொத்துக்களை மட்டுமே தங்கள் கைவசம் வைத்திருப்பார்கள் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. (According to estimates by the UK’s House of Commons published online on Saturday)

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...