Pages

Monday, April 9, 2018

சம்பளம் குறைவு என்பதால் 3 வருடங்களாக கடிதங்களை டெலிவரி செய்யாமல் முடக்கிய போஸ்ட்மேன்!

அதிரை நியூஸ்: ஏப்.09
சம்பளம் குறைவு என்பதால் 3 வருடங்களாக கடிதங்களை டெலிவரி செய்யாமல் முடக்கிய போஸ்ட்மேன்.

பொதுவாக ஆண்கள் தாங்கள் வெளியில் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு வடிகாலாக வீட்டிலுள்ள பெண்களை பாடாய்படுத்தவர், பெண்கள் தங்களின் குழந்தைகளிடம் அதை காட்டுவார்கள். அதேபோல் ஆண்கள் வீட்டில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு பழிவாங்குவதாக நினைத்துக் கொண்டு அதை தங்கள் அலுவலகத்தின் கீழ்மட்ட ஊழியர்களிடமும், பொதுமக்களிடமும் காட்டுவார்கள். சமீபத்தில் கூட ஒரு விமானி தன் வீட்டு பிரச்சனையால் விரக்தியுற்று அவருடைய பிரச்சனைக்கு சிறிதும் சம்பந்தமில்லாத பயணிகளுடன் ஒரு மலையின் மீது மோதி விமானத்தை சிதறச் செய்தார். அதுபோல,

இத்தாலியில் போஸ்ட்மேனாக பணியாற்றி வந்த ஒருவர் தான் பார்க்கும் வேலைக்குரிய சம்பளம் கிடைக்கவில்லை என்ற எரிச்சலில் கடந்த 3 வருடங்களாக ஒரு கடிதத்தை கூட டெலிவரி செய்யவே இல்லையாம், அனைத்தையும் தனது வீட்டில் சுமார் 40 பெட்டிகளில் சேமித்து வைத்துள்ளார், இதன் எடை சுமார் அரை டன் இருந்துள்ளது.

மேலும், கடந்த வருடமே தனது பணியிலிருந்து ராஜினாமா செய்துவிட்ட இந்த போஸ்ட்மேன் தனது காரின் பின் இருக்கையில் சுமார் 70 கடிதங்களுடனும் ஒரு பெரிய வெட்டுக்கத்தியுடனும் பிடிபட்டதை தொடர்ந்து வீட்டை போலீஸார் சோதனை செய்ததை தொடர்ந்தே இக்குட்டு வெளிப்பட்டுள்ளது. இதில் ஏராளமானவை பேங்க் ஸ்டேட்மெண்ட்கள், பில்கள், தனியார் கடிதங்கள் போன்ற ஆவணங்களும் அடக்கம்.

தற்போது இந்நபர் திருட்டு, தகவல் தொடர்புகளை தவறாக பயன்படுத்துதல் மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றுதல் ஆகிய குற்றங்களின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். 'ஏண்டாப்பா இப்படி செய்தாய்' என போலீஸார் கேட்ட போது தந்த சம்பளம் பத்தல அதனால தான்' என வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

Source: The Guardian / Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...