Pages

Tuesday, April 24, 2018

துபையில் 3 சக்கர பைக் டேக்ஸி சேவை அறிமுகம் (படங்கள்)

அதிரை நியூஸ்: ஏப்.24
துபையில் புதிதாக 3 சக்கர பைக் டேக்ஸிக்கள் சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த பைக் டேக்ஸிக்கள் துபை மரீனா, துபை பைனான்ஸியல் சென்டர் மற்றும் ஜூமைரா பீச் ரெஸிடென்ஸி ஆகிய இடங்களிலிருந்து மட்டும் 6 மாத காலத்திற்கு மெட்ரோ நிலையங்கள் செல்லும் பயணிகளை குறிவைத்து சோதனை அடிப்படையில் இயக்கப்படவுள்ளன.

சோதனை காலத்திற்குப் பின் சுமார் 100 மூன்று சக்கர பைக் டேக்ஸிக்களை களமிறக்க முடிவு செய்துள்ளனர். இந்த 3 சக்கர வாகனத்தின் மூலம் எளிதாக மெட்ரோ மற்றும் டிராம் நிலையங்களுக்குச் செல்லலாம். முதல் 10 நிமிட சவாரிக்கு 10 திர்ஹமும் கூடுதல் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 1 திர்ஹம் என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் 2 பேர் மட்டும் செல்லக்கூடிய ரேஞ்ச்ரோவர் சொகுசு சவாரி வாகனமும் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...