Pages

Sunday, April 8, 2018

அமீரகத்தில் 5 லட்சம் திர்ஹம் மருத்துவக் கட்டணத்தை செலுத்திய நல்லுள்ளம்!

அதிரை நியூஸ்: ஏப்.08
குறைபிரசவத்தில் பிறந்த பிலிப்பைனிய குழந்தையின் 5 லட்சம் திர்ஹம் மருத்துவ கட்டணத்தை செலுத்திய நல்லுள்ளம்.

கடந்த 2017 வருடம் அக்டோபர் 4 ஆம் தேதி ஷார்ஜா பிரைம் ஹாஸ்பிட்டலில் பிலிப்பைனிய பெண் ஒருவருக்கு 23 வார குறை பிரசவத்தில் சுமார் 650 எடையுடன் 500 மில்லி தண்ணீர் பாட்டிலின் அளவைப் போன்ற உடம்புடனும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு இலவச இணைப்பாக குறைபிரசவக் குழந்தைகள் சந்திக்கும் பல்வேறு நோய்களுடன் பிறந்ததால் பல அறுவை சிகிகச்சைகள், சிறப்பு மருத்துவம் மற்றும் கண்காணிப்புக்கள் என ஷார்ஜா யூனிவர்ஸிட்டி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டும் தொடர்ந்தன.

தொடர் சிகிச்சைகளின் விளைவாக குழந்தை குணமடைந்து வந்தது ஒருபுறமென்றால் இன்னொருபுறம் பிரைம் ஹாஸ்பிட்டலுக்கு 95,000 திர்ஹமும், ஷார்ஜா யூனிவர்ஸிட்டி மருத்துவமனைக்கு 481,095 திர்ஹமும் செலுத்த வேண்டியிருந்தது. இந்நிலையில் இந்த செய்தி கல்ஃப் நியூஸ் பத்திரிக்கையில் வந்ததை தொடர்ந்து வாசகர்கள் மூலம் வசூலான சுமார் 6,040 திர்ஹம் நன்கொடை மருத்துவ செலவுகளுக்காகவே கட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில், தன்னை யார் அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பாத சிறந்த மனிதர் ஒருவர் பிரைம் ஹாஸ்பிட்டல் பாக்கியான 95,000 திர்ஹத்தை செலுத்தியதுடன் உச்சகட்டமாக ஷார்ஜா யூனிவர்ஸிட்டி மருத்துவ மனையின் கட்டணமான 481,095 திர்ஹத்தை செலுத்தினார். மேலும், இன்னும் 4 வாரங்களில் குழந்தை டிஸ்சார்ஜ் ஆகும் வரை உள்ள செலவையும் தானே கட்டிவிடுவதாக உறுதியளித்து சென்றுள்ளாராம். பணம் கட்டப்பட்டதை 2 மருத்துவமனைகளும் உறுதி செய்துள்ளதுடன் தங்கள் பங்கிற்கும் சில கட்டண தள்ளுபடிகளை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...