Pages

Tuesday, April 10, 2018

அமீரகத்தில் புனிதமிகு ரமலானில் 50% சிறப்புத் தள்ளுபடி விலையில் உணவுப் பொருட்கள் விற்பனை!

அதிரை நியூஸ்: ஏப்.10
எதிர்வரும் மே மாதம் மத்தியில் துவங்கவுள்ள புனிதமிகு ரமலானை முன்னிட்டு அமீரகம் முழுவதுமுள்ள 600க்கு மேற்பட்ட ஹைப்பர், சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் யூனியன் கோ-ஆப்பரேட்டிவ் ஸ்டோர்களில் 25% முதல் 50% வரை சுமார் 10,000க்கு மேற்பட்ட உணவு மற்றும் மளிகை பொருட்களின் மீது சிறப்பு தள்ளுபடியை அறிவித்துள்ளது அமீரக பொருளாதார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வாடிக்கையாளர் பாதுகாப்பு இயக்குனரகம்.

மேலும் இந்தத் திட்டத்தை செயல்படுத்திடும் வகையில் வர்த்தகர்கள், மொத்த விற்பனையாளர்கள், இறக்குமதியாளர்கள் போன்றோருடன் கலந்தாலோசணைகள் செய்யப்பட்டும் வருகின்றன. கோ-ஆபரேட்டிவ் ஸ்டோர்களில் இந்த வருடமும் 2 வகையான உணவுப் பரிசுக்கூடைகள் 2 வகையான விலைகளில் விற்கப்படவுள்ளது.

புனித ரமலானுக்கு பயன்படும் உணவுப் பொருட்களை கொண்ட 1 வகை பேக்கேஜ் 100 திர்ஹமும், இன்னொரு வகை பேக்கேஜ் 200 திர்ஹத்திற்குள்ளும் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (The open basket will include two packages of different price ranges. The first package will contain 20 items costing less than Dh100, while the second will also contain 20 items to be sold for less than Dh200.

நுகர்வோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்த 'வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு இயக்குனரகத்திற்கு' புகார் அளிக்க விரும்புவோர்கள் போனில் தொடர்பு கொள்ள 600-522-225 or by email at info@economy.ae ஆகியவற்றின் மூலம் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...